பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 111

207. நாள்வாய்ப் பெறினும், தம் நள்ளாதார் இல்லத்து

வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்;-கேளாய்; அபரானப் போழ்தின் அடகிடுவா ரேனும், தமராயார் மாட்டே இனிது.

பசியுள்ள முற்பகற் காலத்தில் தானே பெற்றாலும் தமக்கு அன்பில்லாதவர்களுடைய வீட்டிலே உபகாரமாகக் கொடுக்கப்பட்ட விரும்பத்தக்க பொரிக்கறியோடு கூடிய உணவும், வேம்பு போற் கசப்புடையதாகவே இருக்கும். பிற்பகற்காலமான காலமற்ற காலத்திலே, இலைக்கறியோடு கூடிய உணவையே இடுவார்களேனும், தமக்கு அன்புடைய உறவினர்களிடத்திலே பெற்று உண்பதோ இனிதாயிருக்கும். -

நாள்வாய் - காலையும் ஆம். அபரானப்பொழுதுநண்பகலுக்குப் பின்வரும் பொழுது. ‘காலத்தால் அன்பற்றவர் களிடமிருந்து பெறும் பெரிய உதவியை விடக் காலங் கடந்தேனும் அன்புடையாரிடமிருந்து பெறும் சிறிய உதவியே இனிதாகும் என்பது கருத்து.

208. முட்டிகை போல முனியாது, வைகலும்,

கொட்டியுண் பாரும், குறடுபோல் கைவிடுவர்; சுட்டுக்கோல் போல, எரியும் புகுவரே, நட்டார் எனப்படு வார்.

சம்மட்டி என்னும் கருவியைப்போல, மீண்டும் மீண்டும் சென்று தொடர்பு கொள்வதை வெறுக்காது, நாள்தோறும் பிறர்பொருளை அடித்தடித்துப் பெற்று உண்பவர்களும், அப்படிக் கொடுத்தவ்ர்களுக்குத் துன்பம் வந்த காலத்து உலைக்கள வெம்மை அணுகியதும் பற்றிய இரும்பை அதன்பால் விட்டுவிட்டுத் தான் மீளும் குறட்டைபோல, அவர்களைக் கைவிட்டு ஒதுங்கிவிடுவார்கள். ஆனால் உண்மையான நண்பர்கள் என்று சொல்லப்படுபவர்களோ, அந்த உலையினுள்ளே புகுந்து அப்போதும் உதவுகிற சுட்டுக் கோலைப்போலத் தம் நண்பர்களின் வாட்டத்திலும் பிரியாது, அவருடன் கலந்து, அவருக்கு உதவியாயிருப்பர்.

முட்டிகை-சம்மட்டி குறடு-பற்றுங் குறடு. சுட்டுக் கோல். உலையாணிக்கோல் கொட்டியுண்பது அவர் தமக்குத் தரும்படி அவரைத் தம் வசமாக்கிப் பெற்று உண்பது.

209. நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்

மறுமையும் செய்வதொன்று உண்டோ-இறுமளவும்