பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 - நாலடியார்-தெளிவுரை

இன்புறுவ இன்புற்று எழீஇ, அவரொடு துன்புறுவ துன்புறாக் கால்? நல்ல மணமுள்ள பூக்களால் தொடுக்கப்பெற்ற தலைமாலையினை அணிந்திருப்பவளே! நண்பர்கள், தம்முடன் நட்புப் பூண்டவர்களுக்கு, அவரும் தாமும் இறந்துபோகும் காலம் வரையினும் இன்பமடையத் தக்கவற்றிற்கு அவரோடு தாமும் இன்பப்பட்டு நடந்து, துன்பமடையத் தக்கவற்றிற்கு அவரோடு தாமும் துன்பப்பட்டு நடவாமற்போனால், மறுமையிலும் அத்தகையோர் செய்யத்தக்க நல்ல செயல்தான் ஏதாவது ஒன்று உள்ளதோ?

‘இம்மையிலே தான் அவர் நற்பண்புடன் நடக்க வில்லையே? மறுமையிலாவது நடக்கலாமல்லவோ? என்றால், மறுமையிலும் அவர் அப்படி நடவார் என்றனர். இதனால், நண்பர்களின் ஒழுக்க முறைமை கூறப்பட்டது. இங்கே நட்பு, சுற்றத்தாரின் உறவுப் பாசம்’

210. விருப்பிலார் இல்லத்து வேறிருந்து உண்ணும்

வெருக்குக் கண் வெங்கருனை வேம்பாம்;-விருப்புடைத் தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை, என்போடு இயைந்த அமிழ்து. அன்பில்லாதவர்களுடைய வீட்டிலே, தனியே இருந்து உண்ணுகின்ற, பூனைக் கண்போல விளங்கும் சூடான பொரிக்கறியோடு கூடிய உணவும், வேம்புபோலக் கசப்பு உடையதேயாகும். ஆனால், தம்மீது விருப்பமுடையவரும், தம்மோடு ஒத்தவருமான ஒருவருடைய வீட்டிலே உண்ணப்படும், தெளிந்த நீரினையுடைய குளிர்ச்சியான புல்லரிசிக் கூழானது, உடலிற்குப் பொருந்தின அமுதமாக விளங்கத் தக்கதாகும்.

வெருக்கு-வெருகுப்பூனை. ‘தம் தகுதிக்கு மேற்பட்டவர்களை நாடி உண்பது கூடாது’ என்பது கருத்து. இதனால் சுற்றத்தினரைச் சமமாகக் கருதி அன்புடன் உபசரிக்கவேண்டிய கடமை கூறப்பட்டது.

22. நட்பு ஆராய்தல்

‘நண்பர்கள்’ என்று சொல்லப்படுபவர் பலப்பல வகையினராக நம்முடன் தொடர்பு கொள்பவர்கள்.