பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 119 |

223. இறப்பவே தீய செயினும், தன் நட்டார்

பொறுத்தல் தகுவதொன்று அன்றோ?-நிறக்கோங்கு உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட ஒருவர்பொறை யிருவர் நட்பு. -

தன்னுடன் நட்புக் கொண்டவர்கள், மிகுதியான தீமைகளையே தனக்குச் செய்தனரானாலும், அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல் தகுதியுடைய ஒரு செயல் அல்லவோ? நல்ல நிறமுள்ள கோங்கின் பூவிலே, அழகுள்ள வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கின்ற, உயரமான மலைகளையுடைய நாட்டையுடையவனே ஒருவர் பொறுத்துக் கொள்வது இருவருடைய நட்புக்கும் துணையாகின்றது அல்லவோ?

‘இருவர் நட்பு’ என்றது, கலந்த இருவரும் ஒருவருக் கொருவர் நட்பாகும் நிலையைக் காட்டியதாகும். பிழை பொறுக்காவிடில் இருபாலும் நட்புக் கெடும் என்பது கருத்து.

224. மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம் --

கடுவிசை நாவாய் கரையலைக்கும் சேர்ப்ப . விடுதற்கு அறியார் இயல்பிலரேல், நெஞ்சம் சுடுதற்கு மூட்டிய தீ.

- மோதி மடிந்து வீழ்கின்ற அலைகள் கொணர்ந்து தந்த ஒளியுடைய சிறந்த முத்துக்களை, மிகுந்த விரை வினையுடைய கப்பல்கள் கரைகளிலே அலையச் செய்து தள்ளுகின்ற கடற்கரைக்கு உரியவனே! நட்பினை விடுவதற்கு அரியவராயிருப்பவர்கள் இயற்கையான நற்குணம் இல்லாதவரானால், அவர் நம் மனத்தை எரிப்பதற்கு மூட்டிய நெருப்பாவார் என்று அறிவாயாக.

நண்பர்களின் பிழைச் செயலால், அறிஞரது உள்ளம் வருந்தும் தன்மை கூறிப், பிழை பொறுத்தலின் உயர்வை விளக்குவது இது. -

225. இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்

பொன்னாகப் போற்றிக் கொளல் வேண்டும் -

பொன்னொடு நல்லிற் சிதைத்ததீ நாடொறும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குத லால். துன்பங்களையே எந்நாளும் செய்தாலும் விட்டுப் பிரியத்தக்கவர் அல்லாதவர்களைப் பொன்னைப் போலக்