பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 நாலடியார்-தெளிவுரை -

கருதிப் போற்றிக் கொள்ளுதலே வேண்டும். எதுபோல என்றால், பொன் முதலிய நற்பொருள்களுடனே நல்ல வீட்டையும் சிதைத்துவிட்ட நெருப்பையும், வெறுத்து ஒதுக்காது விரும்பி, நாள்தோறும் தம்வீட்டிலே யாவரும் உண்டாக்குவது போல என்க.

‘நெருப்பு ஒரு காலத்து வீட்டைச் சுட்டதாயினும், அதன் பயனை அறிந்து, அதனை வெறுக்காமல் மீண்டும் தம் வீட்டு அடுப்பிலே மக்கள் மூட்டுகின்றதைப் போல, நட்பினரின் பிழைகளையும் மறந்து நட்பைப் பேணவேண்டும் என்பது கருத்து.

226. இன்னா செயினும், விடுதற்கு அறியாரைத்

துன்னாத் துறத்தல் தகுவதோ? - துன்னருஞ்சீர் விண்குத்தும் நீள்வரை வெற்ப! களைபவோ, கண்குத்திற் றென்றுதம் கை?

பிறவிடத்துச் சேர்தற்கு அருமையான சிறப்பினை உடைய, வானத்தை முட்டுவதுபோன்று உயரமாக வளர்ந்துள்ள மூங்கில்களை உடைய மலைகளுக்கு உரிய தலைவனே! கண்ணைக் குத்திவிட்டதென்று யாரும் தம் கையினை நீக்கிப் போடுவார்களோ அது போலவே விடுவதற்கு அரியவராகப் பழகிவிட்டவர்களை அவர்கள் தமக்கு துன்பமே செய்தாலுங்கூட, அவருடன் சேராமல் அவரை நீக்கி விட்டுவிடுதல் தகுதி உடையதாகுமோ? (ஆகாது என்பது கருத்து)

227. இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்,

கலந்து பழிகாணார், சான்றோர் - கலந்தபின், தீமை எடுத்துரைக்கும் திண்ணறிவு இல்லாதார், தாமும், அவரிற் கடை.

விளங்குகின்ற நீரினைக் கொண்ட குளிர்ச்சியான கடற்கரையினை உடைய தலைவனே! ‘தமக்குத் துன்பமே செய்தாலும் சான்றோர்கள், ஒருவருடன் கலந்தபின்னர், அவருடைய பழியினைக் கருதிப் பார்க்கவே மாட்டார்கள். ஒருவரோடு பழகிய பின்னர், அவருடைய தீய செயல்களை வெளிப்படுத்துக் கூறுகின்ற திண்மையான அறிவு இல்லாதவர்கள், அப்படித் தீமை செய்தவர்களினும் மிகவும் இழிவானவர்கள்’ என்று அறிவாயாக. -