பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 121

‘நண்பரின் குற்றங்களைப் பிறரிடம் கூறிப் பழிப்பவர் மிகவும் இழிந்தவர் என்பது கருத்து.

228. ஏதிலார் செய்தது இறப்பவே தீதெனினும்,

நோதக்கது என்னுண்டாம், நோக்குங்கால்?-காதல் கழுமியார் செய்த, கறங்கருவி நாட! விழுமிதாம், நெஞ்சத்துள் நின்று. ஒலிக்கும் மலையருவிகளையுடைய நாட்டின் தலைவனே! “அயலார் செய்தது மிகவும் தீயதே என்றாலும், ஆராய்ந்து பார்க்குமிடத்தே, அவரை வெறுக்கத் தக்கதாக என்ன இருக்கிறது? அன்பு மிகுந்தவர் ஒரொரு சமயத்திலே செய்த தீங்குகள், மனத்துள்ளாகவே அடங்கி நிலைபெற்று நின்றுவிட்டால், அதுவும் சிறந்ததாகப் பின்னர் விளங்கிவிடும்” என்று அறிவாயாக.

“அத்தீங்குகளைப் பிறரிடம் கூறாது நெஞ்சிலே அடக்கிக் கொண்டால் அதனைச் செய்தவர், தாமே பின்னர் மனம் வருந்தித் திருந்திக் கூடுவர் என்பது கருத்து.

229. தமரென்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத்

தமரன்மை தாமறிந்தார் ஆயின், அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக் கொளல் “தம்மைச் சேர்ந்தவர்கள்’ என்று, தாமே விரும்பி நண்பராக்கிக் கொள்ளப்பட்டவர்களைத், தம் உறவிற்குத் தகுதியற்றவராயினமையைத் தாமே பின்னர் அறிந்து கொண்டனரேனும், அவரைத் தம்மைச் சேர்ந்த பிறரினும் சிறப்பாக மதித்து, அவரிடம் காணப்பட்ட தமரல்லாத இயல்பினைத் தம் உள்ளத்தினுள்ளேயே அடக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

‘நட்பிற்குத் தகுதியற்றவர் என்று தோன்றினும், அதனை

வெளிப்படக் காட்டாமல், அவரைப் பெரிதாக மதிப்பதுபோலக்

காட்டி, அவரது பண்பற்ற செயல்களை உள்ளத்தினுள்ளேயே

அடக்கிக் கொள்ளுதல் வேண்டும், புறங்கூறிப் பழித்தலாகாது’

என்பது கருத்து.

230. குற்றமும், ஏனைக் குணமும், ஒருவனை

நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான் மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க, அறைகடல்சூழ் வையம் நக!