பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 - நாலடியார்-தெளிவுரை

ஒருவனை நண்பனாகக் கொண்டதன் பின்னர், அவனுடைய குற்றங்களையும் மற்றைக் குணங்களையும் யான் தேடித்தேடித் திரிந்து கொண்டிருந்தேன் என்றால், நட்புச் செய்தவனுடைய இரகசியத்தைக் காக்காமல் விட்டவன் செல்கின்ற கதியிலே ஒலிக்கின்ற கடல்சூழ்ந்த உலகம் எல்லாம் கைகொட்டிச் சிரிக்கும்படியாகச் சென்று, யானும் துன்புறுவேனாக!

‘நட்பிற் பிழைபொறுப்பேன்’ என்று, ஒருவன் உரைத்த

சூள் இது. இப்படியே ஒவ்வொருவரும் தமக்குள் உரைத்து உறுதி கொள்ளுதல் வேண்டும். -

24. கூடா நட்பு

“கூடா நட்பு என்பது பொருத்தமற்ற சிநேகம் ஆகும். இருவர், தம் உள்ளத்துள் கலந்த கேண்மை உடையவராகித், தகுதியுடன் நட்பாயிருப்பதே உண்மையான நட்பாகும். அப்படியில்லாமல், உள்ளக் கலப்பு இல்லாதே, வெளியே நட்பினர்போல நடிப்பது எல்லாம் பொருந்தாத நட்பாகவே, கருதப்படும்.

மேலும், குடிப்பிறப்பு, குணம், ஒழுக்கம், உள்ளம், அறிவுடைமை என்ற இவற்றாலும், மற்றும் பிறபிற தகுதியுடைமைகளாலும் பொருந்தாதவர்களுடன் கொள்ளும் நட்பும் கூடா நட்பே யாகும்.

நட்புச் செய்வது, உற்றுழி உதவியும் இன்பத்தும் துன்பத்தும் இணைந்து நின்றும், ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கும் பொருட்டாகவே அல்லாமல் வெற்றுரையாடி வீண்பொழுது போக்குவதற்கு மட்டுமே அன்று. இதனை மனத்துட் கொண்டே நட்பினரை ஆராய்ந்து கொள்ளுதல் வேண்டும்.

நட்பில் பிழைபொறுத்தல் சிறப்பு என்றாலும், அதற்காகப் பொருந்தாதவருடன் நட்புக்கொண்டு, அவர்செய்யும், எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டே போகவேண்டும் என்பதில்லை. அதனால், கூடாநட்பின் இயல்புகளைக் கூறுவதன் மூலம், அதனை விலக்குவது பற்றி இந்தப் பகுதியுள் கூறப்படுகிறது.

231. செறிப்பில் பழங்கூரைச் சேறனை யாக

இறைத்தும், நீர் ஏற்றும், கிடப்பர் - கறைக்குன்றம்