பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 127

3. இன்ப இயல்

புலன்கள் தாமே உணர்வு உடையன அன்று. அவற்றான் விளையும் பயன்களை எல்லாம் இன்பமாகவும் துன்பமாகவும் கருதி உணருகின்ற தன்மை, மனத்திற்கே உள்ளதாகும்.

‘இன்பம்’, இவ்வாறு மனத்தினாலேயே உணரப்படும் ஒன்றாதலால் இன்பத்தினை உண்மையாக உணர்ந்து பயன் பெறுவதற்கு மனத்தின் செப்பமும் தெளிவும் இன்றியமையாததாகும்.

‘மனம் புலன்களின் கிளர்ச்சிகளுக்குத்தான் உட்பட்டு, அறியாமை வசத்ததாக விளங்குமானால், தீயனவும் நல்லனவாக உணரப்படுதலும், துயர்தருவனவும் இன்பந்தருவனவாகப் பிழைபட அறியப்படுதலும் கூடும். இதனால், இன்பத்தின் தன்மையை உள்ளபடி அறிவதற்குத் தக்க வகையிலே ஒவ்வொருவரும், தத்தம் மனத்தைத் தகுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும் என்பது தெளிவாகும்.

அந்த முறையிலே, உள்ளத்தினை இன்ப நெறிகளில் மட்டுமே செலுத்துகின்ற திட்பம் உடையதாகச் செய்வது பற்றிக் கூறும் பகுதி இதுவாகும்.

25. அறிவுடைமை

அறிவு உடைமையாவது இயல்பான நுண்ணறிவு உடைமையும், கல்வி கேள்விகளின் பயனாகப் பெற்ற செப்பமும் தெளிவும் ஆகும். இன்னவரின் உறவு நன்மை விளைப்பது, இன்னவரின் உறவு தீமை பயப்பது எனவும், இன்ன செயல் நன்மை தருவது, இன்ன செயல் தீமை தருவது எனவும் நல்லன. தீயனவற்றின் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து இன்பந்தரும் நெறிகளிலே மனத்தைச் செலுத்துவதே உண்மையான அறிவுடைமை ஆகும். - ஆகவே, அறிவு என்பது, காரிய காரணங்களின் உண்மைகளைப் பகுத்து அறிந்து கொள்ளுகின்ற தன்மை என்று கொள்க. இயற்கை அறிவெனவும், செயற்கை அறிவு எனவும் அறிவு இருவகையாகக் கூறப்படும்.

இயற்கை அறிவு, இயல்பாகவே ஒவ்வொருவரிடமும் அமைந்தது; செயற்கை அறிவோ அங்ஙனமன்றி ஒவ்வொரு