பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நாலடியார்-தெளிவுரை

வரும் தத்தம் முயற்சியினால், கண்டும் கேட்டும் கற்றும் ஈட்டிக்கொள்வது. இவற்றின் சிறப்பினை இனிக் காணலாம்.

, 241. பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்

தாமேயும் நாணித் தலைச்செல்லார்; காணாய், இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது, அணங்கருத் துப்பின் அரா. பகைவராயுள்ளவர், தம் வலியழிந்து பணிந்துவிடுகின்ற தளர்ந்த இடத்தை ஆராய்ந்து பார்த்துத் தகுதி உள்ளவர்கள், அவர்கள்மேல் படைகொண்டு செல்லுதலுக்குத் தாமே வெட்கப்பட்டவர்களாக, அவர்களை வெல்வதற்குப் போகமாட்டார்கள். பார்வையிலேயே வெல்லும் அரிய வலிமையினையுடைய பாம்பும், முழுநிலவாக அல்லாமல், இளம்பிறையாக ஆயின காலத்திலே, திங்களை வருத்துவதற்குச் சேராது; இதனை அறிவாயாக.

“பகைவனானாலும், அவன் தளர்ந்திருக்குங் காலத்து அவனை அழித்தல் அறிவுடையவர் செயல் அன்று’ என்பது கருத்து.

242. நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு

அணிகலம் ஆவது அடக்கம்; பணிவில்சீர் மாத்திரை இன்றி நடக்குமேல், வாழுமூர் கோத்திரங் கூறப் படும். பெரிய கடலினது குளிர்ச்சி பொருந்திய கரைகளை உடைய நாட்டின் தலைவனே! வறுமைப்பட்ட மக்களுக்கு எல்லாம் ஆபரணமாக விளங்குவது, அடக்கமுடன் இருத்தலே யாகும். அடக்கம் இல்லாத தன்மையுடனே, தன் எல்லைகடந்து அவர் நடப்பாரானால், அவர் வாழ்கின்ற ஊரிலே அவர்களுடைய குடும்பமே இழித்துப் பேசப்படுவதாகிவிடும்.

வறுமைக்கண், அடக்கமுடன் இருப்பதுதான் அறிவு உடைமை என்பது கருத்து.

243. எந்நிலத்து வித்திடினும், காஞ்சிரங்காய் தெங்காகா,

தென்னாட் டவரும் சுவர்க்கம் புகுதலால், தன்னாற்றான் ஆகும் மறுமை; வடதிசையும்; கொன்னாளர் சாலப் பலர்.

எந்த நிலத்திலே விதையை விதைத்தாலும், எட்டி விதையானது தென்னை மரமாக ஒருபோதும் வளரவே