பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 129


மாட்டாது. தென்திசை நாட்டவர்களும் சுவர்க்கலோகம் செல்வதனால், தத்தம் செயலாலேயே மறுமை இன்பம் என்பதும் உள்ளதாகும். வடதிசை நாட்டினுள்ளும், அந்த மறுமை இன்பத்திற்காவன செய்து ஒழுகாது வீண்காலம் கழிப்பவர்கள் பலராவர்.


‘வடதிசை உடையவரே சுவர்க்கம் புகுவர்; தென்


திசையார் எத்திறத்தானும் புகமாட்டார் எனக் கூறிய சில


மதவாதிகளை மறுத்து, முனிவர் உரைத்தது இது. அவரவர் * ஒழுக்கமே மறுமை இன்பம் தருவது என்பது கருத்து. அவ்வொழுக்கம் அறிவுடைமையினாலேதான் அமைவது என்பதும் அறிக.


244. வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன் தீஞ்சுவை யாதும் திரியாதாம்;-ஆங்கே, இனந்தீது எனினும், இயல்புடையார் கேண்மை மனந்தீதாம் பக்கம் அரிது.


வேம்பின் இலைகளுக்கு ஊடாகவே இருந்து தான் கனிந்து பழுத்தாலும், வாழைப்பழமானது தன்னுடைய இனிய சுவையினின்றும் எள்ளளவும் மாறுபடாது. அப்படியே தாம் சேர்ந்த கூட்டம் தீயதானாலும், நல்ல பண்பு உடையவர் களுடைய நட்பானது, அதனால் மனங்கொடியதாகிப் போய்விடும் தன்மை உடையதாதல் அரிதாகும்.


வேப்பந் தழைகளை இட்டு, அதனிடையே வாழைக் காய்களை வைத்துப் பழுக்கச் செய்வது உலக வழக்கம். அதனால் வாழையின் கனிச்சுவை கெடாது. அது போலவே, அறிவுடை யார், தீயவர் கூட்டத்திடைச் சில சமயம் சேர நேர்ந்தாலும் மனத்தின் பண்பு கெட்டவர்களாக ஆகமாட்டார்கள் என்பது கருத்து.


245. கடல்சார்ந்தும் இன்னி பிறக்கும்; மலைசார்ந்தும்


உப்பீண்டு உவரி பிறத்தலால், தத்தம் இனத்தனையர் அல்லர், எறிகடல் தண்சேர்ப்ப! மனத்தனையர் மக்கள்என் பார். கடற்கரையைச் சார்ந்திருக்கும் இடமாயிருந்தாலும், அவ்விடத்தும் இனிமையான நீர் உண்டாகும். மலைப் பகுதியைச் சார்ந்திருக்கும் இடமாயிருந்தாலும், அவ்விடத்தும் உப்பு நிறைந்த உவர்நீர் உண்டாதலும் உண்டு. அதனால், அலைமோதுகின்ற கடலின் குளிர்ச்சியான கரையை