பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

130 - நாலடியார்-தெளிவுரை

உடையவனே! மக்கள் என்பவர்களும் தத்தம் இனத்தைப்

போன்றவர்கள் அல்லர்; தத்தம் மனத்தை ஒத்தவர்களே யாவர் என்றறிவாயாக

‘நீர், தான் கொண்டிருக்கும் தன்மையைப் பொறுத்தே கொள்ளப்பவடுவதன்றிச் சார்ந்திருக்கும் இடத்தைப் பொறுத்துக் கொள்ளப்படுவதன்று. அதுபோலவே, மக்களும் அவரவர் மனத்துச் செப்பத்தைக் கருதி மதிக்கத் தக்கவர்களே யல்லாமல், அவரவர் சார்ந்திருக்கும் இனத்தைக் கருதி மதிக்கத்தக்கவரல்லர்’ என்பது கருத்து.

246. பராஅரைப் புன்னைப் படுகடல் தண்சேர்ப்ப!

ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ, நல்ல மரூஉச்செய்தி யார்மாட்டும் தங்கும் மனத்தார் விராஅஅய்ச் செய்யாமை நன்று.

பருத்த அடியினையுடைய புன்னை மரங்கள் சேர்ந்திருக்கின்ற, குளிர்ச்சியான கடற்கரைச் சோலைகளை உடைய நாட்டின் தலைவனே! உறுதி உடையவர்களாக ஒரு நிலையிலேயே நிலைபெற்று நிற்கும் உள்ளத்திண்மையினை உடையவர்கள், நன்மைகள் சேர்ந்திருக்கின்ற செய்கையை உடையவரான எவரிடத்திலும், நீங்குவதும் சேர்வதும் ஆகிய செயலைச் செய்வார்களோ? இப்படிச் செய்வதனைக் காட்டினும், ஒருவரோடும் நட்புச் செய்யாமல் இருப்பதே நல்ல அறிவுடைமையாகும்.

‘நல்லவரோடு சேர்ந்தபின் பிரிவது அறிவுடைமை யாகாது; அப்படிச் சேர்ந்து பிரிவதைவிடச் சேராமல் இருப்பதே நல்லது என்பது கருத்து. - 247. உணர உணரும் உணர்வுடை யாரைப்

புணரப், புணருமாம் இன்பம்; புணரின், தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப் பிரியப் பிரியுமாம் நோய்.

நன்மை தீமைகளைப் பகுத்து அறிவதற்குரிய அறிவு உடையவர்களைச் சேர்தலால், அப்படிச் சேர்பவர்களுக்குப் பலவகையான இன்பங்களும் வந்து சேர்வனவாகும். நன்மை தீமைகளைப் பகுத்தறிய வல்ல அறிவில்லாதவர்களைத் தெரியாமல் சேர்ந்துவிட்டால், அவரை விட்டு நீங்கின மாத்திரத்தாலேயே, அவரால் உற்ற துன்பங்களும் நம்மை விட்டு நீங்கிவிடும்.