பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 131

‘அறிவுடையவரைச் சேர்வதால் இன்பமும், அறிவற்றவரைச் சேர்வதால் துன்பமும் நேரும் என்பது கருத்து.

248. நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும், நிலையினும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத் தலையாகச் செய்வானும் தான். நல்ல நிலையிலே கொண்டு தன்னை வைக்கின்றவனும், தன்னைத் தன் நிலையினின்றும் கலங்கச் செய்து கீழ் நிலைக்குக் கொண்டு போகின்றவனும், இருக்கின்ற நிலையைக் காட்டினும் மென்மேலும் தன்னை உயர்த்தி வைக்கின்றவனும், தன்னைத் தலைமையாளனாகச் செய்கின்றவனும் எல்லாம் தானேயாவன்.

‘அவனவன் அறிவுடைமையே ஒருவனுக்கு உயர்வும் தாழ்வும் தருவது; அது பிறரான் வருவதன்று’ என்பது கருத்து.

249. கரும வரிசையால், கல்லாதார் பின்னும்

பெருமை உடையாரும் சேறல், - அருமரபின் ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப! பேதைமை அன்று; அது அறிவு. அருமையான மரபினையுடைய அலைகள் ஒலி முழங்கிக் கொண்டிருக்கும் கடலினது குளிர்ந்த கரையினையுடைய நாட்டின் தலைவனே! செயல்களின் முறைமையினாலே, படியாத மூடர்களது பின்னாலும் கற்ற பெருமை உடையவர்களும் சென்று சேர்ந்திருப்பது, அவருடைய பேதைமை அன்று; அதுவே அறிவுடைமை என்று அறிவாயாக

குறித்த செயல் காரணமாக, ‘அறிவற்றவர்பின் அறிவுடையோர் செல்வதும் அறிவுடைமையே என்பது கருத்து

250. கருமமும் உள்படாப், போகமும் துவ்வாத்,

தருமமும் தக்கார்க்கே செய்யா,-ஒருநிலையே

முட்டின்றி மூன்றும் முடியுமேல், அஃதென்ப,

‘பட்டினம் பெற்ற கலம்’. : அறம் பொருள்களுக்குக் காரணமான செயல்களையும் கடன்பட்டுச் செய்து, அவற்றால் வருவனவாகும் இவ்வுலக இன்பங்களையும் துய்த்துத் தகுதியுடையவர்களுக்கே தருமங்களையும் செய்து, இம் மூன்றும் ஒரு பிறப்பிலேயே தடையின்றி முடியுமானால், அதுதான் பட்டினத்தை வந்து அடைந்த மரக்கலம்போலச் சிறப்பு உடையதாகும்.

i