பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 . நாலடியார்-தெளிவுரை

சொன்னாலும், முற்பிறப்பிலே புண்ணியம் செய்யாத உயிரையுடைய ஒர் உடம்பிற்குள் அறிவானது ஒரு போதும் நுழையவே மாட்டாது.

‘அறிவுரைகள் பூர்வபுண்ணியம் அற்றவர்களின் உள்ளங்களிலே என்றும் நுழைவதில்லை’ என்பது கருத்து. இருந்தைக்கு-கரிக்கு குறினும்-அடிப்பினும் நோலா-நோற்றல் இல்லாத உடம்பிற்கு உடம்பை உடைய உயிருக்கு.

259. பொழிந்தினிது நாறினும், பூமிசைதல் செல்லாது,

இழிந்தவை காமுறுஉம் ஈப்போல-இழிந்தவை தாங்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும், தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச்சொற் றேர்வு? தேனைச் சொரிந்து, இனிமையாக நறுமணம் வீசினாலும், அப்பூவிலுள்ள தேனை உண்ணுவதற்குப் போகாமல் இழிவான பொருள்களையே விரும்பிச் செல்லுகின்ற தன்மையினை யுடைய ஈயைப்போல, இழிவானவைகளே பொருந்தின மனமுள்ளவர்களுக்குத், தகுதியுடையவர் வாயினின்று வெளிப்படும் தேனின் தன்மை பொருந்திய தெளிவுண்டாக்கும் அறவுரைகளின் தெளி வெல்லாம் என்ன பயனைத் தரும்? ஏதும் பயன் தருவதில்லை என்பது முடிவு. - ‘அறிவற்றோரின் மனம் நல்லோர் அறவுரைகளில் ஈடுபடாது கீழானவற்றினையே நாடிச் செல்லும் என்பது கருத்து.

260. கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி

பற்றாது தன்னெஞ்சு உதைத்தலான்-மற்றுமேர் தன்போல் ஒருவன் முகம்நோக்கித், தானுமோர் புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.

கற்றறிந்த சான்றோர்கள் சொல்லுகின்ற, குற்றமற்ற நுண்மையான நூற்கேள்விகளைத் தனக்கு உறுதியாகப் பற்றிக் கொள்ளாமல், தன்னுடைய உள்ளமானது அவற்றை இகழ்ந்து தள்ளி விடுதலால், கீழ்மகனாவன், தன்னைப் போன்ற மற்றொரு கீழ்மகனுடைய முகத்தைப் பார்த்துத் தானும் ஓர் அற்பமான பேச்சை நிகழ்த்தத் தொடங்கி விடுவான்.

‘கற்றார் பேச்சைக் கேளாது, தான் கற்றவன் போலச் செருக்குற்றக் கீழ்மகன், தன்போற் கீழ்மக்களுக்குப் பிரசங்கம் செய்யவும் தொடங்கிவிடுவான்’ என்பது கருத்து. கீழ்த்தரமான பிரசங்கிகளைக் குறித்துச் சொல்லியது இது.