பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 - நாலடியார்-தெளிவுரை

செல்வம் பெரிதுடையர் ஆயினும், கீழ்களை

நள்ளார், அறிவுடை யார். அள்ளி எடுத்துக் கொள்ளலாம் எனும்படியான சிறிய அரும்புகளை மிகுதியாக உடையனவாக இருந்தாலும் அவை சூட்டிக் கொள்ளத்தக்க மலர்கள் இல்லாமையினாலே, யாரும் கள்ளிச் செடியின் மீது அதன் பூக்களைக் கொய்வதற்குக் கைநீட்ட மாட்டார்கள். அதுபோலவே, மிகுதியான செல்வத்தை உடையவர்களாயினும் கீழ்மக்களை அறிவுடையோர் சென்று உதவி கேட்டு ஒருபோதும் அணுகவே மாட்டார்கள்.

‘கள்ளி பூத்தாற் போன்றதே, கீழ்மக்களின் பகட்டான செல்வமும், அது எவருக்கும் பயன்படாது கழியும் என்பது கருத்து. &

263. மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்

வல்லூற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்; செல்வம் பெரிதுடைய ராயினும், சேட்சென்று நல்குவார் கட்டே நசை.

மிகுந்த அலைகளையுடைய கடற்கரையிலே இருந்தாலும், வலிமையான ஊறுதலை உடையதான உப்புத் தன்மை இல்லாத கிணற்றினிடத்தே சென்றுதான், வேட்கை உடையோர் நீர் உண்பார்கள். ஈயாதவர் பெருஞ்செல்வம் உடையவர்களாக இருந்தாலும் அவர்களை விட்டு, நெடுந்தொலைவிற்குச் சென்றாயினும், கொடுப்பவர்களிடத்திலேதான் அறிவுடை யோரின் விருப்பமும் செல்லும்,

வல்லுற்று - அருகிச் சுரக்கும் ஊற்று விரைவில் சுரக்கும் ஊற்றுமாம்.'கடலின் நிறைந்த நீரை விட்டு உவரில்லாத கிணற்று நீரை விரும்புவதுபோலக் கீழ்மக்களின் பெருஞ்செல்வத்தை அணுகாது ஈபவரின் சிறுகொடையையே பெரியோர் விருப்பமுடன் நாடுவர் என்பது கருத்து. -

264. புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே; உணர்வது உடையார் இருப்ப;-உணர்விலா வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்பவே பட்டும் துகிலும் உடுத்து ‘அறிய வேண்டுவன’ எனச் சான்றோர் விதித்தவற்றை எல்லாம் அறியும் அறிவை உடையவர்கள் வறியவர்களாக இருக்கவும், அறிவே சிறிது மற்றவரும், வட்டும் வழுதுணையும் போல உயிர்த் தன்மையற்று எங்கும் பல்கி வாழ்பவருமான