பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 - நாலடியார்-தெளிவுரை

1. துறவற இயல்

‘ஒழுக்கம்’ என்பது பொதுவியல்பினால் இருவகைப் பட்டுச்சொல்லப்படும். அவை, இல்லறமும்துறவறமும் என்பன. இல்லறமாவது, வாழ்க்கைத் துணைவியுடன் இல்வாழ்க்கை நடத்தி, இருமை இன்பங்களையும் அனுபவித்து வாழும் இன்ப வாழ்வு, துறவறமாவது, வீடு பெறுவதென்ற உறுதியான ஒரே குறிக்கோளுடன் உலகத்துப் பற்றுக்கள் அனைத்தையுமே அறந்துறந்து வாழுகின்ற துறவறவாழ்வு.

இவ்விரண்டினுள், திருக்குறள் முதலில் இல்லறத்தைக் கூறி அதன்பின் துறவறத்தைக் கூறுகிறது. இந்நூலினுள் முதற்கண் துறவறமும், பின் இல்லறமும் கூறப்படுகின்றது.

“துறவறம் நிலைபேறு உடையதான வீடுபேற்று இன்பத்தைப் பெறுவதற்குக் காரணமாவது என்பர். ‘இல்லறம்’ . அந்த அளவுக்குக் காரணம் ஆகாமைப்பற்றி முதலில் துறவறம்

வைக்கப்பட்டது என்பார்கள்.

துறவறம், பற்று அற்ற வாழ்வு ஆதலால், இந்தப் பகுதியினுள், உலகத்துப் புறப்பற்று அகப்பற்றுகளை எல்லாம் நிலையற்றவை என்று கருதி, அவற்றின்பால் பற்றின்றி வாழ்தல் வேண்டும் என்பது வற்புறுத்தப்படும். -

துறவு இருவகையாக மேற்கொள்ளப்படும். இளமையிலேயே துறவு பூண்பது ஒருவகை; இல்வாழ்விலே திளைத்துப் பின் அதன் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வது மற்றொரு வகை. இவற்றுள் முதலிற் கூறப்பெற்றதே துறவு நெறியில் சிறப்பானது.