பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - \ - 139

கீழ்மக்கள், செல்வமிகுதியினாலே பட்டும் பிற நல்லாடைகளும் உடுத்துச் செல்வந்தராக வாழ்கின்றார்களே? நெருங்கிய கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலே, அவரவர் செய்த முன்வினைப் புண்ணியமோ இப்படி அவர்கள் நிலைமை வேறுபட்டுள்ளதன் காரணம்?

“அற்பர் செல்வராயிருக்க, அறிவுடையோர் வறுமையுடை யவராயிருப்பது முன்வினைப் பயன் போலும் என்பது கருத்து. ‘வாழ்பவே’, ‘வாழ்வரே என்பதும் பாடம். 265. நல்லார் நயவர் இருப்ப, நயமிலாக்

கல்லார்க்கொன் றாகிய காரணம்,-தொல்லை வினைப்பயன் அல்லது, வேனெடுங் கண்ணாய்! நினைப்ப வருவதொன் றில்.

வேல்முனை போன்ற நீட்சியான கண்களை உடையவளே! நற்குணம் உடையவர்களும், நல்ல அறிவுடையவர்களும், வறியவர்களாக இருக்கிறார்கள். நற்குணம் இல்லாதவர் களுக்கும், கல்வியறிவு இல்லாதவர்களுக்கும் ஒப்பற்ற செல்வப் பொருள் உண்டாயிருக்கிறது. இதற்குக் காரணம், பழைய பிறப்பிலே செய்த வினையின் பயனால் வந்த விளைவு என்பது அல்லாது, வேறு ஆராய்ந்து பார்க்கத்தக்கதான காரணம் யாதொன்றும் இல்லை.

இதனால், இப்பிறப்பில் உதவுவாரும், பிற்பிறப்புகளில் செல்வம் உடையவராவர் என்பது விளங்கும். முற்பிறப்பில், உதவாத நிலையே இப்பிறப்பில் அவர் வறியவரானது என்பதும் கருத்தாகும்.

266. நாறாத் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்!

நீறாய் நிலத்து விளியரோ-வேறாய புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ, பொன்போலும் நன்மக்கள் பக்கம் துறந்து பூவின் நறுமணம் வீசாத புறவிதழ்களைப்போல, மலர்களுட் சிறந்த தாமரை மலர்மேல் வீற்றிருக்கின்ற பொற்பாவை போன்ற திருமகளே! பொன்னைப்போல அருமையான நற்குணமுடைய மக்களிடத்திலே சென்று பொருந்தி இருப்பதைக் கைவிட்டு, அவர்களினும் மாறுபட்டவர்களாகிய கீழ்மக்களின் பக்கமே நீ சென்று சேர்பவளாவாய்; அதனால், இவ்வுலகத்திலே நீ அழிந்து சாம்பலாகக் கடவாயாக! -