பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நாலடியார்-தெளிவுரை

அதனை விலக்க மாட்டார்கள்; அவனுக்குப்பின் அவர்கள் கொடுக்கும் பொழுதும், அவன் வந்து விலக்க மாட்டான்.

பரம்பரை பரம்பரையாகக் கருமித்தனமாக இருக்கும் ஒரு குடும்பத்தைக் குறித்துக் கூறியது இது.

279. இரவலர் கன்றாக, ஈவார்ஆவாக,

விரகிற் சுரப்பதாம், வண்மை;- விரகின்றி வல்லவர் ஊன்ற வடியாபோல், வாய் வைத்துக் கொல்லச் சுரப்பதாம் கீழ். இரவலர்களைத் தம் கன்றுகளைப் போலக் கருதிக் கொடுப்பவர்கள் அக் கன்றுகளின் தாயாம் பசுவினைப் போல, அவரைக் கண்டதும் உள்ளத்து மகிழ்வினாலே சுரந்து கொடுப்பதே சிறந்த வள்ளன்மையாகும். அந்த உள்ள நெகிழ்வான மகிழ்வு இல்லாமல், வலிமை உடையவர் அழுத்திக் கறக்கப் பால் தருகின்ற பசுவைப் போல, அவ்வவ் விடங்களிலே நிறுத்தித் துன்பப்படுத்தக் கொடுப்பதே கீழ்மக்களின் இயல்பாகும்.”

கொல்லுதல்-மிக்க துன்பம் செய்தல். ‘கீழ் மக்கள், தம்மை வருத்தியும் அச்சுறுத்தியும் வாட்டுகிற தீயோருக்கே தம் பொருள்களைத் தருவார்களே அல்லாமல், தகுதியுடைய இரவலர்களுக்கு மனமுவந்து உதவமாட்டார்கள்’ என்பது கருத்து.

280. ஈட்டலும் துன்பம், மற்று ஈட்டிய ஒண்பொருளைக்

காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்,- காத்தல் குறைபடின் துன்பம், கெடின் துன்பம், துன்பக்கு உறைபதி மற்றைப் பொருள்.

பொருளைத் தேடிச் சேமித்தலும் மிகவும் வருத்தமாகும்; அப்படி ஈட்டிய சிறந்த செல்வத்தைப் பேணிக் காத்தலும் அவ்வாறே பெரும் துன்பமாகும்; அப்படிக் காத்தலில் குறைப்பட்டாலும் துன்பம்; அச்செல்வம் அழிந்து போனாலும் துன்பம். இப்படிச் செல்வமானது பலவகையான வருத்தங் , ‘களுக்கே ஒர் உறைவிடமாக இருப்பதாகும்.

ஈத்து மகிழாமல் சேமித்து வைக்கும் செல்வம் பற்றிச் சொல்லியது இது.