பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

புலியூர்க் கேசிகன் - 149

காலத்திலோ, அவனை நோக்கித் துன்பம் இன்றி இருக்கின்றீரோ?’ என்று கேட்பவர் கூட, இவ்வுலகத்தில் ஒருவரும் இல்லாமற் போவார்கள்.

செல்வம் உள்ள காலத்து வந்து கூடிப், பின் கைவிடும்

கயவரைப் பிணந்தின்னும் காக்கைகள் போன்றவர் என்கிறது

இப்பாடல். இதனால், இன்மையாளனை எவருமே அணுகார் என்பது கூறப்பட்டது.

285. பிறந்த குலம் மாயும், பேராண்மை மாயும், சிறந்ததம் கல்வியும் மாயும், -கறங்கருவி கன்மேற் கழுஉங் கணமலை நன்னாட! இன்மை தழுவப்பட் டார்க்கு.

ஒலி முழங்கும் அருவிகள், கற்களின்மேல் விழுந்து ஆரவாரிக்கின்ற மலைத் தொகுதிகளை உடைய சிறந்த நாட்டை உடையவனே! வறுமையினாலே கட்டிக் கொள்ளப் பட்டவர்களுக்கு அவர்கள் பிறந்த நல்ல குலத்தின் பெருமையும் இல்லாமற் போகும்; அவர்களுடைய சிறந்த ஆண்மைக் குணங்களும் அழிந்து போய்விடும். மேன்மைப்பட்ட அவர்களுடைய கல்விச் சிறப்பும் பயனற்றதாக அழிவெய்தும்.

‘வறியவர்க்குக் குடிப் பெருமையும், ஆண்மையும், கல்வியுங்கூட எச்சிறப்பும் தந்து உதவாமற் போய்விடும் என்பது கருத்து.

286. உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு

உள்ளுர் இருந்தும், ஒன்று ஆற்றாதான், -உள்ளூர் இருந்து, உயிர்கொன்னே கழியாது, தான்போய் விருந்தினன் ஆதலே நன்று.

வயிற்றினுள்ளே நிறைந்த மிகுந்த பசியினாலே

தன்னிடத்திலே உணவினை விரும்பி வந்த இரவலர்களுக்குத்

தான் உள்ளூரிலேயே இருந்து ஒர் உதவியும் செய்வதற்கு மாட்டாத வறுமையாளன், தன்னுரிலேயே இருந்து தன் வாழ்நாளை வீணாகக் கழியாமல், தான் வேற்றுார்களிற்போய்

மற்றவர்க்கு விருந்தினனாக இரந்துண்டு காலங்கழிப்பதே

நல்லதாகும்.

‘பசியின் மிகுதியால் உணவு விரும்பி வந்தவர்களுக்கு உதவ முடியாத வறுமையைவிடப்பிச்சை எடுத்து உண்டலே சிறந்தது’ என்பது கருத்து. -