பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - - 153

புறங்கடை வைத்தீவர், சோறும்; அதனால், மறந்திடுக, செல்வர் தொடர்பு.

நாமானால், வரும் விருந்தினர்களுக்கு நம் வீடு முழுவதையும் காட்டி உள்ளே அழைத்து வந்து உபசரிப்போம். ஆனால், செல்வச் செருக்கு உடையவர்களோ என்றால் தமது வீட்டை எளியவர் காண்கிற மாத்திரத்தாலேயே அதன் உறுதி அழிந்துவிடும் என்று நினைக்கிறவர்களைப் போலத் தம் வீட்டைக் காட்டுவதற்கு நாணங் கொண்டு, புறங்கடையிலேயே இருக்க வைத்துச் சோறிடுவார்கள்; அதனால் செல்வர்களுடைய தொடர்பை மானமுடையவர்கள் எவரும் கொள்ளாமல் மறந்துவிடுவார்களாக

இல்லம் - மனையாள் எனவும் கூறுவர். ‘செல்வரின் உறவு உளங்கலந்த உறவன்று’ என்பது கருத்து.

294, இம்மையும் நன்றாம்; இயனெறியும் கைவிடாது,

உம்மையும் நல்ல பயத்தலாற், செம்மையின் நானங் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண், மானம் உடையார் மதிப்பு.

கத்துரிச் சாந்தின் மணமானது நன்றாகக் கமழுகின்ற கூந்தலை உடையவளே! மானம் உடையவர்களின் பெருமையானது இவ்வுலகத்திலும் நன்மை தருவதாகும். கூடிய நல்ல வழியையும் கைவிட்டுவிடாது மறுபிறப்பிலும் நல்லவற்றையே உண்டாக்குதலால், அது மறுமைக்கும் நல்லதேயாகும். இதனை நீ அறிவாயாக!

மதிப்பு - பிறரால் மதிக்கப்படுதல். ‘மானமுடையவராக வாழ்தல் இம்மையிற் பெருமையையும், மறுமையில் புண்ணியப் பயனையும் தரும் என்பது கருத்து. நானம்.கஸ்தூரி, அதனைச் சேர்த்துக் கூட்டிய மயிர்ச் சாந்து.

295. பாவமும் ஏனைப் பழியும் படவருவ,

சாயினும் சான்றவர் செய்கலார் - சாதல் ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம்; அவைபோல் அருநவை யாற்றுதல் இன்று. பாவச் செயல்களையும் உலகத்துப் பழி ஏற்படும் செயல்களையும் சான்றோர்கள், அவற்றைச் செய்யாத காலத்துத் தாம் சாகும்படி நேரிட்டாலும் கூட, அவை உண்டாகும்படி வரும் செயல்களைச் செய்யவே மாட்டார்கள்.