பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 - • * நாலடியார்-தெளிவுரை

ஏனென்றால், சாதல், அந்த ஒரு நாளிலே, அந்த ஒரு வேளையில் மாத்திரமே துன்பந் தருவதாகும்; அந்த இழிவான செயல்களைப் போல நிரந்தரமாக மிகுந்த துன்பங்களைச் செய்வதன்று. - ‘மானங் கெடுகிற செயல்களிலே ஈடுபடுவதைக் காட்டிலும்

உயிரிழப்பதே சிறந்தது என்பது கருத்து.

296. மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்

செல்வர் எனினும், கொடாதவர்-நல்கூர்ந்தார்; நல்கூர்ந்தக் கண்ணும், பெருமுத் தரையரே, செல்வரைச் சென்றிரவா தார்.

வளப்பத்தையுடைய இப்பெரிய உலகத்திலே வாழ்பவருக்குள் எல்லாம் சிறந்த செல்வர்கள் என்றாலுங்கூட வந்து இரந்தவர்களுக்குக் கொடாத உலோபிகள் தரித்திரர்களே ஆவர். வறுமை அடைந்தபோதினும் பொருள் உடையவரிடம் போய், அவரை இரந்து நிற்காத மானம் உடையவர்களோ, பெருமுத்தரையர் போன்ற செல்வர்களே யாவார்கள்.

‘ஈயாத செல்வரினும், சென்று இரவாத மானம் உடைய வறுமையாளனே மதிப்பிற்கு உரியவன்’ என்பது கருத்து. பெருமுத்தரையர் தஞ்சைப் பகுதியிலிருந்த குறுநில மன்னர்; அந்நாளிலே இருந்தவர்.

297. கடையெலாம் காய் பசி அஞ்சும்; மற்றுஏனை

இடையெலாம் இன்னாமை அஞ்சும்;-புடையுலாம் விற்புருவ வேனெடுங் கண்ணாய்! தலையெல்லாம் சொற்பழி யஞ்சி விடும்.

வில்லைப்போன்ற புருவத்தையும், பக்கங்களிலே உலவுகின்ற வேலாயுதம் போன்ற நீண்ட கண்களையும் உடையவளே! “கடைத் திறமானவர்கள் எல்லாரும், தம்மை வருத்துகின்ற பசி நோயினைக் குறித்தே அஞ்சுவார்கள். மற்றைய இடைத்திறமானவர்கள் எல்லாரும் தம்மிடம் பொருள் வளம் இல்லாமையைக் குறித்து அஞ்சுவார்கள். ஆனால், மேன் மக்களோ என்றால் உலகத்தாருடைய பழிச்சொற்களுக்கே மிகவும் அஞ்சுவார்கள்” என்று அறிவாயாக.

“பழிச் சொற்களால் மானக்குறைவு நேரிடுதலால், தலைமக்கள் அதற்கே பெரிதும் அஞ்சுவர் என்பது கருத்து.