பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - - 155

298. நல்லர் பெரிதளியர்! நல்கூர்ந்தார்’ என்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால், கொல்லன் உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ, தலையாய சான்றோர் மனம்.

“இவர் மிகவும் நல்லவர் இவர் மிகவும் கருணை செய்யத்தக்கவர் இவர் வறுமை உடையவராயிருக்கிறார்” என்று இகழ்வாகப் பேசிச் செல்வர்கள் பிறரை அவமதிப்புடன் பார்க்கின்ற காலத்திலே, மேன்மக்களாகிய சான்றோர்களுடைய உள்ளமானது, கருமானின் உலைக்கூடத்திலே ஊதி எழுப்புகிற நெருப்புப்போல, உள்ளேயே கனன்று கொதித்துக் கொண்டிருக்கும்.

‘உள்கனலும் என்றது, சான்றோர் அடக்கம் உடைய வராதலால், ‘மானம் அழியப் பிறரைச் செல்வர் அவமதிப்பதற்கே, மானமுடையவரான அவர் உள்ளக் கொதிப்படைவர் என்பது கருத்து.

299. நச்சியார்க் கீயாமை நாணன்று; நாணாளும்,

அச்சத்தான் நாணுதல் நாணன்றாம்; எச்சத்தின் மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது சொல்லா திருப்பது நாண்.

ஒன்றை விரும்பிவந்து அணுகியவர்களுக்கு அதனைக் கொடாமலிருப்பது வெட்கமன்று நாள்தோறும் அஞ்ச வேண்டிய காரியங்களுக்கு அஞ்சி வாழ்தலும் வெட்கமன்று; தம்மினும் குறைபாடுடைய அற்பராக இருந்து ஆராய்ச்சி இல்லாதவர் தம்பாற் செய்த எளிமையைப் பிறருக்கு வாய்விட்டுச் சொல்லாதிருக்கும் மன உறுதியே உண்மையில் நாணமாகும்.

‘அறிவற்றோர் தமக்குச் செய்த அவமதிப்பை பிறர் அறியச் செய்யாதிருத்தலே நாணம் உடைமையாகும் என்பது கருத்து.

300. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை

இடம் வீழ்ந்த துண்ணா திறக்கும்; இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர், மானம் அழுங்க வரின். காட்டுப் பசுவைக் கொன்ற, காட்டிலிருக்கின்ற பெரும்

புலியானது, தான் கொன்ற அது இடப்புறத்தே வீழ்ந்ததாயின், அதனை உண்ணாது பசியால் தன் உயிரையும் விட்டுவிடும்.