பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நாலடியார்-தெளிவுரை

விசாலமான இடத்தை உடையதாகிய சுவர்க்கத்தின் இடமே தம் கைக்கு வந்து சேர்வதானாலும் சிறந்த மேலோர்கள், அது தமது மானம் கெடுவதனாலே வருவதாயிருந்தால் அதனை விரும்பவே மாட்டார்கள்.

‘மானத் தாழ்வு வருவதாயிருந்தால் எந்தப் பேரின்பத்தையும் சான்றோர்கள் விரும்பார்கள் என்பது கருத்து. கடமா. காட்டுப்பசு. இடம் வீழ்ந்ததைப் புலி உண்பதில்லை என்பதைப் பிற சங்க நூல்களும் கூறும்.

31. இரவு அச்சம்

இரந்து வருபவர்களுக்கு, அவருடைய வறுமைத் துயரைப் போக்குவதற்குரிய யாதாயினும் கொடுத்து உதவவேண்டுவது உடையவர் கடமை என்று அறநூல்கள் வற்புறுத்துவதனால், இரத்தலையும் சான்றோர் ஒரு நெறியாக ஏற்றுக் கொள்கின்றனர் போலும் என்று எவரும் கருதிவிடுதல் கூடாது.

இரத்தல் எவ்வளவு கொடுமையானது இழிவானது என்ற சொல்லுவதன் மூலம், அதற்கு உட்படாதிருத்தலே சிறந்த வாழ்வாகும் என்பதை இந்தப் பகுதி விளக்கிக் கூறுகிறது.

இதனால் அவ்வளவு கொடிய மனத்துயருக்கும் இழிவுக்கும் தம் வறுமையின் காரணமாக உட்பட்டு வருபவர்க்கு, இருப்பவர் தவறாது உதவவேண்டும் என்ற நியதியும் உறுதிப்படும்.

இரத்தலால் ஏற்படும் பலவகையான குறைபாடுகளை எடுத்துக் கூறி, அதற்கு அஞ்சி அதனைக் கைவிடுதலை வற்புறுத்துவதே இந்தப் பகுதியாகும்.

301. நம்மாலே யாவர், இந் நல்கூர்ந்தார்; எஞ் ஞான்றும்

தம்மாலாம் ஆக்கம் இலர், என்று;-தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும் தெருண்ட அறிவி னவர்?

“இந்த வறியவர்கள் நம்மாலேயே ஆக்கம் உடையவர்கள். எப்போதும், தம்முடைய முயற்சியினாலே ஆகும் ஆக்கம் உடையவரே அல்லர்” என்று, தம்மை மேலானவராக மயங்கின செருக்குடைய மனத்தினர்களின் பின்னாக, அவர்களுடைய உதவியை நாடித் தெளிந்த அறிவினை உடையவர்கள் செல்வார்களோ? ஒரு போதும் செல்லமாட்டார்கள்.