பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 - நாலடியார்-தெளிவுரை

304. திருத்தன்னை நீப்பினும், தெய்வஞ் செறினும் உருத்த மனத்தோடு உயர்வுள்ளின் அல்லால் அருத்தஞ் செறிக்கும் அறிவிலார் பின்சென்று, எருத்திறைஞ்சி நில்லாதாம், மேல். திருவானது தன்னைக் கைவிட்டுப் போய்விட்டாலும், தெய்வமானது தன்மேற் சினந்து வந்து வருத்தினாலும், அவற்றால் தளர்ந்து விடாமல், ஊக்கங் கொண்ட உள்ளத்துடன், தம் உயர்வினைப் பெரிதாக நினைப்பதே அல்லாமல், பணத்தை ஈத்து உதவாமல் வீணே சேர்த்து வைத்திருக்கின்ற அறிவற்ற செல்வர்களின் பின்னே சென்று, மேலோர்கள் தலை குனிந்து ஒருபோதும் நிற்கவே மாட்டார்கள். ‘மேலோர், தம் உயர்வினைப் பெரிதாக மதிப்பாரே அல்லாமல், செல்வர் பின்சென்று பணிந்து வாழார்’ என்பது கருத்து.

305. கரவாத திண்ணன்பிற் கண்ணன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை - இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகுமாம்; என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு? t

இரந்து வருபவர்களுக்குப் பொருளை ஒளிக்காது உள்ளத்தைக் கொடுக்கின்ற உறுதியான அன்பினையுடைய கண்போன்ற மேலோர்களிடத்திலுங்கூடச் சென்று யாசியாமல் வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும். யாசித்தலாகிய அந்தச் செயலை நினைக்குங் காலத்திலேயே உள்ளம் உருகிப் போகின்றது. அப்படியிருக்கவும் பிறரிடம் இரந்து ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங் காலத்திலே அப்படிக் கொள்பவரின் நோக்கந்தான் என்னவோ?

‘இரத்தலுக்கு அஞ்சி அதனைக் கைவிடல் வேண்டும்’ என்பது கருத்து.

306. இன்னா இயைக; இனிய ஒழிக’ என்று

தன்னையே தானிரப்பத் தீர்வதற்கு - என்னைக்கொல், காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்டு ஏதி லவரை இரவு? “துன்பங்கள் நம்மிடத்தே வந்து சேரட்டும்; இன்பங்கள் எல்லாம் நம்மைவிட்டு நீங்கிப் போகட்டும்’ என்று தன் மனத்தையே தான் நிரம்பச் செய்தலினால், தீர்ந்து