பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நாலடியார்-தெளிவுரை

ஒருவர் மற்றொருவரைச் சார்ந்து நடத்தலைச் செய்து வணக்கமாயிருப்பது உலகில் முறைமையே அல்லாமல், தம் பெருமை கெட்டு, “ஏதாகிலும் உதவி செய்ய மாட்டீர்களோ? என்று சொல்லுகிற சொல்லைக் காட்டினும், தாம் துன்பம் உண்டாகச் செல்லும் பழைய நெறியே இனிமையாய் இராதோ?

‘செல்வரை அணுகி, அவர் உயர்வுக்கு இசையத் தாம் பணிவுடன் இருத்தல் பொருந்துமே யல்லாமல் அவரை இரந்து பெறமுயலுதல் பொருந்தாத ஒழுக்கம் என்பது கருத்து.

310. பழமை கந்தாகப் பசைந்த வழியே

கிழமைதான் யாதானும் செய்க!-கிழமை பொறாஅர் அவரென்னிற், பொத்தித்தம் நெஞ்சத்து அறாஅச் சுடுவதோர் தீ. பழைய காலத்து நட்பினை ஆதாரமாகக் கொண்டு வந்து சிநேகித்த விடத்திலே, தாம் யாதாகினும் ஒரு தக்க உதவியை அவருக்குச் செய்யக் கடவர். அவர், அப்படித் தக்கதாகச் செய்யும் உதவியைத் தம் கடமையாக ஏற்றுக்கொள்ளாமல் போவாராயின், அது தமக்கு மனத்திலே பதிந்து நீங்காமல் எரிக்கும் படியான ஒரு தீயாகவே விளங்கும்.

‘அயலார் உதவாமற்போனால் வரும் வருத்தத்தினாலும், பழைய நண்பர்கள் உதவாதபோது வரும் வருத்தம் மிகுதியாயிருக்குமாதலால், அவர்பாற் சென்று இரத்தல் வேண்டா மென்பது கருத்து.

5. பொது இயல்

பொதுவியலாவது, அரசியல் போன்று முன்னர்க் கூறியவற்றுள் எல்லாம் அடங்காத பொதுப்பட்ட செய்திகளைக் கூறும் பகுதி என்று பொருள்படும். இந்தப் பகுதி அறிவியல் என்னும் ஒரே அதிகாரத்தை மட்டுமே கொண்டதாகும். இதனால் ஓர் அதிகாரமும் ஓர் இயலாக அமைதல் கூடும் என்பதும் அறியப்படும்.

அவையானது ஒரு குறிப்பிட்ட தொடர்புடையோர் மட்டுமன்றிப் பல்வேறு நிலையினரும், கருத்தினரும், தொழிலினரும் கூடியிருப்ப தொன்றாகும். ஆட்சித் தலைவனானவன் அதன் போக்கினை அறிந்தே தன் செயல்களை வகுக்கும் கடப்பாடு உடையவனாயிருக்க வேண்டும்.