பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 161

இந்தப் பொதுவான தகுதியுடைமை பற்றியும் இது பொதுவியல் என வகுக்கப்பட்டிருத்தல் பொருந்தும் எனக் கொள்ளலாம்.

32. அவை அறிதல்

அவை அறிதலாவது, அவையிலே உள்ளவர் களினுடைய கல்வி கேள்வி தகுதி முதலியவற்றின் தராதரங்களை நுட்பமாக அறிந்து, அதற்கு ஏற்ற படியான வகையிவே அங்கு நடந்து கொள்ளுதல் ஆகும்.

அவையினை அறியாமற் சென்று, அங்கு தான் கூடியிருக்கவும் உரையாடவும் துணிபவன், பெரிதும் அவமானத்திற்கே உள்ளாகும் நிலையினை அடைவான். அவையின் போக்கினை ஆராய்ந்து, அதற்குத் தக்கபடியாகத் தான் நடந்து கொள்ளுகின்ற ஒருவனோ, அந்த அவையினரின் மதிப்பைப் பெறுவதோடு அதனால் உலகிற் பலராலும் மதிக்கப்படும் புகழையும் அடைவான். இதனைப் பற்றிய செய்திகளை இந்தப் பகுதியுள் நாம் காணலாம்.

311. மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டு, ஆங்கோர்

அஞ்ஞானம் தந்திட்டு, அதுவாங்கு அறத்துழாய், கைஞ்ஞானங் கொண்டொழுகும் காரறி வாளர்முன்; சொல்ஞானஞ் சோர விடல்.

மெய்ம்மையான அறிவினை உடையவர்கள் கூடியிருக்கும் அவையிலே சேருகிற முறைமையைக் கைவிட்டு, அவ்விடத்திலே ஒர் அறியாமை உடைய பேச்சினைப் பேசிவிட்டு, அந்தப் பேச்சினையே அவ்விடத்திலே மிகவும் அதிகமாகப் பரப்பிக்கொண்டு, தம் அற்பமான அறிவைக் கொண்டு நடக்கின்ற, பழிக்கப்படும் அறிவுள்ளவர்களிடத்திலே, புகழ்ந்து சொல்லத்தக்க தமது அறிவுத் திட்பத்தையும் ஒருவர் வெளிப்படுத்தாது தளரவிட்டு விடல் வேண்டும். r “மூடர்கள் கூடியிருக்கும் கூட்டத்திலே, அறிவுடையோர் தம் அறிவுரைகளைச் சொல்லாதிருக்க வேண்டும்’ என்பது கருத்து.

312. நாப்பாடம் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந்

தீப்புலவற் சேரார், செறிவுடையார்! தீப்புலவன் கோட்டியுள் குன்றக் குடிபழிக்கும், அல்லாக்கால், தோள்புடைக் கொள்ளா எழும்.