பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நாலடியார்-தெளிவுரை

317. பெறுவது கொள்பவர் தோள்போல், நெறிபட்டுக்

கற்பவர்க் கெல்லாம் எளிய, நூல்;-மற்றம் முறிபுரை மேனியர் உள்ளம் போன்று, யார்க்கும் அறிதற்கு அரிய பொருள்.

எல்லா வகையான நூல்களும், பெறுதற்குரிய பொருளைப் பெற்றுக்கொண்டு இசைகிற வேசிமாரின் தோள்களைப் போலப், படிப்பதற்கு உரிய வழிகளிலே தலைப்பட்டுப் படிக்கிறவர்களுக்கு எல்லாம் எளிதாகவே வந்து கைகூடுவனவாகும். மற்றுத் தளிரையொத்த மேனியாரான அந்த வேசியர்களுடைய உள்ளத்தைப் போன்று எவருக்கும் எளிதிலே அறியமுடியாத பொருள் அருமையினை அவை உள்ளாக உடையனவுமாகும்.

‘கற்கும் முறைமைப்படி கற்பவர்க்கு எல்லா நூல்களும் எளிதாகக் கைவரினும், அவற்றின் நுண்பொருளை உணர்தல் சிலரான அறிவுத் திட்பம் உடையவர்களுக்கே கைகூடுவதாகும்’ என்பது கருத்து.

318. புத்தகமே சாலத் தொகுத்தும், பொருள் தெரியார்,

உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும், - மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே; பொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறு.

புத்தகங்களை மாத்திரமே மிகுதியாகத் தொகுத்து வைத்திருந்தும், அவற்றின்கண் சொல்லப்பட்டிருக்கும் நுண் பொருள்களை அறியாதவராகி, அவற்றைக் கொண்டுவந்து வீடெல்லாம் நிறைத்தாலும், அப்புத்தகங்களைப் பாதுகாக்கும் புலவரும் வேறாயிருப்பார்கள்; அவற்றின் பொருள்களை அறிந்து பிறருக்குத் தெளிவிக்கும் அறிவுடையோரும் வேறாகவே இருப்பார்கள்.

‘புத்தகம் தொகுப்பது மட்டுமே புலமை ஆகாது; அவற்றைக் கற்றுத் தாம் தெளிந்து பிறருக்கும் சொல்லித் தெளிவுறுத்தும் அறிவுச் செழுமையே புலமையாகும் என்பது கருதது.

319. பொழிப்பு, அகலம், நுட்பம், நூல் எச்சம், இந் நான்கின்

கொழித்து, அகலம் காட்டாதார் சொற்கள்-பழிப்பில் நிரையாமா சேக்கும் நெடுங்குன்ற நாட உரையாமோ, நூலிற்கு நன்கு?