பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

புலியூர்க் கேசிகன் 165

குறை சொல்வதற்கு இல்லாத கூட்டமாகிய காட்டுப் பசுக்களைத் தம்மிடத்திலே சேரச் செய்கின்ற, உயர்ந்த மலைகளையுடைய நாட்டின் அரசனே! பொழிப்புரையும், அகலவுரையும், நுட்பவுரையும், எச்சவுரையும் ஆகிய இந்நான்கு

உரைகளாலும், நன்றாக ஆராய்ந்து பொருள் விரிவைக்

காட்டாதவருடைய சொற்கள், ஒரு நூலிற்கு நல்ல உரையாகுமோ? ஆகமாட்டாதென அறிவாயாக.

பொழிப்பு-கருத்து விள்ளும்படி தொகுத்துச் சொல்வது. அகலம்-பதப் பொருள் முதலியவற்றை நியாயம் காட்டி விரித்துச் சொல்வது. நுட்பம் - சொல் நுட்பம், பொருள் நுட்பம் ஆகியவற்றைக் காட்டுவது. எச்சம். பாடலிற் சொல்லப்படாது எஞ்சிய தொடர்புடைய செய்திகளைச் சொல்லுதல். இவையே உரையமைதியின் இலக்கணம் ஆகும்.

320. இற்பிறப்பு இல்லார் எனைத்துநூல் கற்பினும்

சொற்பிறரைக் காக்கும் கருவியரோ?-இற்பிறந்த நல்லறி வாளர், நவின்ற நூல் தேற்றாதார் புல்லறிவு தாமறிவ தில். நல்லகுடியிலே பிறந்த பிறப்பின் உயர்வு இல்லாதவர்கள், எவ்வளவு நூல்களைக் கற்றாலும், கல்லாத பிறரின் சொற்களை இகழாமற் காத்தற்கு உரிய அடக்கம் முதலிய கருவிகளை உடையவர்களாவார்களோ? அல்லர். நல்ல குடியிலே பிறந்த நல்ல அறிவாளர்கள், பெரியோர் சொன்ன நூல்களிலே தெளியாதவருடைய ஈனமான அறிவினைத் தாம் உன்னிப்புடன் கவனித்து அறிந்து கொள்வதே ஒருபோதும் இல்லையாகும்.

‘நற்குடிப் பிறந்த நல்லறிவாளர், பிறர் புல்லறிவைக் கவனியார், அவரைத் தூற்றவும் செய்யார் என்பது கருத்து.

6. பகை இயல்

- மனிதனுக்குப் பகையாவது உட்பகை என்றும், புறப்பகை என்றும் இருவகைப்படும். புறப்பகை, தன்னை ஒழிந்த பிறராலும்,

பிறவற்றாலும் தனக்கு எதிராக அமைவது. அது, ஊழ்வினை

வசத்தாலும் பிறரின் அறியாமை வசத்தாலும் ஏற்படுதல் கூடும். ஆனால் அதுபோலன்று உட்பகை. அது, தன் உள்ளத்து உணர்வுகளை ஒருவன் ஒருநெறிப் படுத்தாததன் விளைவாகவே ஏற்படுவது. இதனால், உலகிலே பகைகடிந்து வாழ விரும்புகிறவன், முதலிலே, தன்னுடைய உட்பகையினைக் கடிந்து