பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - - 7

யானையின் பிடரியின்மீது அமர்ந்து, அந்தப் பிடரே தாம் அமர்ந்ததனால் அழகுபெற்றுத் திகழுமாறு கொற்றக் குடையின் நிழலின்கீழ் வெற்றியுலா வந்த மன்னவர்களும், தம் முற்பிறப்பின் பழைய தீவினை வந்து அந்த வாழ்வை எல்லாம் அழித்துவிட, நிலைவேறுபட்டுப் போவார்கள். தாம் முறையாக மணந்து கொண்ட மனையாளையும் காத்துப் பேணும் வலுவற்று, மாற்றார் அவளைச் சிறைப்பிடித்துச் செல்லத், தாம் அதனையும் காணும் அந்த இழிநிலைமைக்கும் ஆளாவர்.

‘அரசியல் செல்வாக்குக்கூட நிலையற்றது’ என்று கூறுவது இது. வெற்றியுலா வந்தவன் நாட்டையும் இழந்து மனைவியையும் மாற்றார் சிறைப்பிடித்துச் செல்லப் பழியுடையவன் ஆதலும் நேரும் என்கிறது பாடல். எருத்தம் கழுத்து குடை - வெண் கொற்றக்குடை சேனை நால்வகைச் சேனை. மேலைவினை - முற்பிறவிகளிலே ஒழுகிய ஒழுக்கங் காரணமாக வந்து பற்றும் ஊழ்வினை. இதனை, “ஏனைவினை எனவும் பாடங் கொள்வர். அது உருத்து வந்து ஊட்டுமாதலால், ‘உவப்ப என்றனர். இதனால், அரசர்கள், தம் செல்வாக்குள்ள போதே அறஞ்செய்வதில் ஈடுபட வேண்டும் என்றனர். இதனால், அரசர்கள், தம் செல்வாக்குள்ள போதே அறஞ்செய்வதில் ஈடுபட வேண்டும் என்றன்ர். ‘குடை நிழலமர்ந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து ஒர் ஊர் நண்ணினும் நண்ணுவர்’ என்ற சான்றோர் வாக்கும் இதனை வற்புறுத்தும்.

4. நின்றன நின்றன நில்லா என உணர்து,

என்றின ஒன்றின வல்லே, செயின், செய்க சென்றன. சென்றன, வாழ்நாள்; செறுத்துடன் வந்தது வந்தது, கூற்று! நாட்கள் செல்லச் செல்ல வாழ்நாளும் கழிந்து கொண்டே போகின்றது. கூற்றமும், உயிரைப் போக்கும் சினத்துடன் அணுக அணுக வந்து கொண்டே இருக்கின்றது. அதனால் நிலை பெற்றன நிலை பெற்றன என்று கருதும் செல்வங்கள் எல்லாம், நிலைத்து நிற்பன அல்ல என உணருங்கள். உணர்ந்து, உங்கள் மனம் பொருந்தின அறச்செயல்களை எல்லாம், உங்களால் கூடுமான வரையிலும் செய்யுங்கள். அதற்கு நாட்களைக் கடத்திக் கொண்டே போகாதீர்கள். விரைவிலேயே காலந்தாழ்த்தாமல் செய்யத் தொடங்கி விடுங்கள்.

செல்வ நிலையாமையை உணர்ந்து அறஞ் செய்ய வேண்டுமென நினைப்பது மட்டும் போதாது; அத்துடன் உடல்