பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நாலடியார்-தெளிவுரை

ஐந்தை அனைத்தானும், ஆற்றிய காலத்துச்

சிந்தியார் சிற்றறிவி னார். புல்லறிவாளர்கள், செல்வமில்லாத காலத்திலும், மிகுந்த நோய் வந்து பற்றிய காலத்திலும் மறுமைக்குரிய அறத்தினைச் செய்யும் கருத்தினை உடையவர்களாகி இருப்பார்கள். செய்யக் கூடிய காலத்திலோ, மறுமைக்குரிய தருமச் செயல்களைச் சிறு கடுகின் அளவாயினும் சிந்திக்கவே மாட்டார்கள். t

‘தமக்குத் துன்பம் வந்த காலத்தில் தருமத்தைப்பற்றி நினைக்கும் சிற்றறிவினர், அது நீங்கிய காலத்து அந்தத் தரும நினைவையும் அடியோடு மறந்து விடுவார்கள் என்பது கருத்து.

330. என்னே மற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார், கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை-அன்னோ அளவிறந்த காதற்றம் ஆருயிர் அன்னார்க் கொளவிழைக்கும் கூற்றமுன் கண்டு.

உலகத்திலே புல்லறிவாளர்கள், அறநெறிகளை இயற்றுவதற்கு உதவியான இவ்வுடலினைப் பெற்றிருந்தும், அளவு கடந்த ஆசைக்கு உரியவரான தம்முடைய ஆருயிர் அனையவரைக் கொண்டுபோக முயற்சி செய்கிற கூற்றத்தின் செயலைக் கண்டும், தாம் தருமசிந்தனை இல்லாதவர்களாகித் தம் ஆயுளை வீணாகக் கழிக்கின்றார்களே? ஐயகோ? இது என்ன காரணமோ?

“யாருக்காகப் பொருள் சேர்க்கிறார்களோ அவரே போய்விட்ட பின்னும், பொருளைச் செலவிடாது உலோப ராயிருப்பவர் புல்லறிவாளர் என்பது கருத்து.

34. பேதைமை

பேதைமையாவது முழு மூடத்தனம் ஆகும். ‘புல்லறிவு’ சிறிது அறிந்தும் பெரிதும் அறியாமையும் உடைய செருக்கின் பாற் பட்டது. ஆனால், பேதைமையோ தானாக எதனையும் சிந்திக்கும் தன்மையே இல்லாத நிலைமை.

இதனால், யாராயினும் ஒருவர், ஏதேனும் சொன்ன விடத்து, அதன் தராதரங்களை முற்றவும் தான் ஆராய்ந்து உணராமல் அதனையே உறுதியாகப் பற்றிக் கொண்டு, துன்பத்துக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படக்கூடும். ஆகவே, இத்தகையோர் நிலைமை மிகவும் ஆபத்தானது.