பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 171

. மனிதனின் உட்பகையாக விளங்கி அவனுடைய நற்செயல்களுக்கான முயற்சிகளிலே நடைக்கல்லாக விளங்குவது இப்பேதைமைப் பண்பாதலினால், இதனைப் பகை இயலுள் கொண்டனர். .

‘கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்னும் மாதர்க்கு அணிகலனாகிய பேதைமையும், இந்த முழு மூடத்தனமும் ஒரே தன்மையெனக் கருதுதல் வேண்டா. அது வேறு; இது வேறு.

331. கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப, ஆமை

நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே

கொலைவல் பெருங்கூற்றங் கோட்பார்ப்ப, ஈண்டை

வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.

கொல்லும் தொழிலிலே வல்லமை உடையதான பெரிய கூற்றமானது, தம் உயிரைக் கொண்டு போவதற்குரிய தக்க வேளையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, இவ்வுலக வாழ்வாகிய வலையினிடத்திலே சிக்கி மிகவும் களித்திருக் கிறவர்களுடைய தன்மையானது, வேடர்கள், உலைநீர்ப் பாத்திரத்தை அடுப்பின்மேல் ஏற்றித் தீமூட்ட, அப் பாத்திரத்திலே வேகுவதற்காக இடப்பட்ட ஆமையானது. தன்னுடைய ஆபத்தான நிலைமையைச் சற்றேனும் அறியாமல், அந் நீரிலேயே முழுகிமுழுகி விளையாடிக் கொண்டிருப்பதைப் போன்றதாகும்.

பேதைமை உடையவரின் இயல்பு கூறப்பட்டது.

332. பெருங்கடல் ஆடிய சென்றார், ‘ஒருங்குடன்

ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்'இற்செய் குறைவினை நீக்கி, அறவினை மற்றறிவாம்’ என்றிருப்பார் மாண்பு.

“குடும்பத்தின் நன்மைக்குச் செய்ய வேண்டிய காரியக் குறைகளை எல்லாம் முதலிலே போக்கிவிட்டு, அறவினைகளை எல்லாம் பின்னாலே கருதுவோம்” என்று கருதி இருப்பவர் களது தன்மையானது, பெருங்கடலிலே நீராடுவது குறித்துச் சென்றவர்கள், இக்கடலின் ஒலி முழுவதும் அடங்கிய பின்னர் நாம் நீராடுவோம்’ என்று அது ஒலியடங்கக் காத்திருந்தாற் போன்றதாகும். -

‘கடல் என்றும் ஒலியடங்காதது போலவே குடும்பக் காரியங்களும் என்றும் முற்றவும் நிறைவுறா. அதனால்,