பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நாலடியார்-தெளிவுரை

அவ்வப்பொழுதே அறவினைகளில் மனஞ் செலுத்துக’ என்பது கருதது. செலுத்தாதார் பேதைமையாளர் என்பது தேற்றம்.

333. குலம், தவம், கல்வி, குடிமை, மூப்பு, ஐந்தும்

விலங்காமல் எய்தியக் கண்ணும், நலஞ்சான்ற மையறு தொல்சீர் உலகம் அறியாமை நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.

உயர்குடிப் பிறப்பும், நல்ல தவமுயற்சிகளும், கல்வியும், செல்வத்தாலாகும் குடித்தனப் பாங்கும், ஒழுக்கத்தின் முதிர்ச்சியும் ஆகிய இவ்வைந்தும் தவறாமல் ஒருவனுக்கு வந்து பொருந்தியபோதும், நன்மை மிகுந்த குற்றமற்ற பழமையான சிறப்பையுடைய உலகத்துக்கு ஏற்ற செயல்களைச் செய்வதை அறியாமலிருப்பது, நெய் இல்லாத பாற்சோற்றுக்குச் சமமானதாகும்.

‘இம்மையில் அவன் எல்லாம் பெற்றும் மறுமைக் காவன செய்யாததனால் பேதைமையாளனே என்பது கருத்தாகும்.

334. கல்நளிை நல்ல, கடையாய மாக்களின்

சொல்நளிை தாமுணரா வாயினும்; - இன்னினியே நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல், என்று உற்றவர்க்குத் தாமுதவ லான்.

பிறர் தம்மிடத்தே சொல்லும் சொற்களைத் தாம் கேட்டு உணர்ந்து கொள்ள மாட்டாதவராயினும், தம்மை அடைந்தவர் களுக்கு அப்போதே தம்மேல் நிற்பதற்கும், இருப்பதற்கும், படுப்பதற்கும், நடந்து செல்வதற்கும் என்ற காரியங்களுக்குத் தாம் உதவியாக அமைவதனால், கீழ்மையான மனிதர்களைக் காட்டினும், கற்களே ஒருவகையில் மிகவும் நல்லவைகளாகும்.

‘பிறருக்கு உதவியாயிருக்கும் கற்கள், உதவாது பேதை மாக்களினும் சிறந்தவை என்று கூறுவதன் மூலம், பேதையர் கல்லினும் கடையர்’ என்றனர்.

335. பெறுவதொன்று இன்றியும், பெற்றானே போலக் கறுவுகொண்டு, ஏலாதார் மாட்டும் - கறுவினால் கோத்தின்னா கூறி உரையாக்காற், பேதைக்கு நாத்தின்னானும், நல்ல சுனைத்து தன்னாற் பெறத்தக்கதான பயன் ஒன்றேனும் இல்லாமலிருந்தும், ஏதோ ஒரு பயனைத் தான் அடைந்தவனே போலத் தன் சினத்தை ஏற்கத்தகாத எளியோரிடத்தினும் பகை

‘ ‘ ‘ ‘