பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நாலடியார்-தெளிவுரை

338. நல்லவை நாள்தோறும் எய்தார்; அறஞ்செய்யார்;

இல்லாதார்க்கு யாதொன்றும் ஈகலார்,-எல்லாம் இனியார் தோள் சேரார்; இசைபட வாழார், முனியார்கொல் தாம்வாழும் நாள்?

ஒவ்வொரு நாளும் பெறத்தக்க நன்மைகளை நாடி அடையமாட்டார்கள்; தருமத்தையும் செய்யமாட்டார்கள்; வறியவர்களுக்கு ஏதொன்றும் கொடுக்கவும் மாட்டார்கள்; இனிமையான தம் மனைவியரது தோள்களைத் தழுவி இன்புறவும் மாட்டார்கள்; புகழ் உண்டாகும்படி வாழவும் மாட்டார்கள்; இப்படிப்பட்ட மூடர்கள் தாம் வாழும் நாட்களை எல்லாம் வெறுக்கவாவது மாட்டார்களோ?

‘அப்படி வெறுக்காமலிருப்பது அதிசயமே என்பது கருத்து. அவர்கள் வாழ்தல் பயனற்றது என்பது முடிவு.

339. விழைந்தொருவர் தம்மை வியப்ப, ஒருவர்

விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை,-தழங்குகுரல் பாய்திரைசூழ் வையம் பயப்பினும், இன்னாதே, ஆய்நலம் இல்லாதார் மாட்டு. ஆராயப்பட்ட நற்குணங்கள் இல்லாதவர்களான மூடர்களிடத்திலே, எவராகிலும் ஒருவர் விரும்பித் தம்மைக் கொண்டாட, அப்படிக் கொண்டாடப்பட்ட மற்றொருவர், “நாங்கள் விரும்பினோமில்லை என்றிருக்கும் தொடர்பானது, முழங்குகின்ற ஒலியினைப் பொருந்திய பாய்ந்துவரும் அலைகளையுடைய கடல் சூழ்ந்த பூமி முழுவதையும் தருவதாயிருந்தாலும், சான்றோருக்கு இனிமையற்றதே யாகும். “மூடர் உறவு எவ்வளவு பெரிதானாலும் சான்றோர் அதனை விரும்ப மாட்டார் என்பது கருத்து.

340. கற்றனவும், கண்ணகன்ற சாயலும், இற்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின் மைத்துனர் பல்கி, மருந்திற் றணியாத பித்தன்’ என்று எள்ளப்படும். ஒருவன் கற்ற கல்விகளும், அவனிடத்திலே மிகுதியாக வுள்ள மென்மைக் குணமும், அவனுடைய உயர் குடிப்பிறப்பும் என்னும் இவைகளெல்லாம், அயலார்கள் கொண்டாடி னால்தான் பெருமை அடையும். அவைகளை உடையவன், தானே அவற்றைச் சொல்லிக் கொண்டால் மைத்துனர்கள்