பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 . நாலடியார்-தெளிவுரை

நிலையாமையையும் உணர்ந்து அதனை விரைவிலேயே செய்யத் தொடங்கி விட வேண்டும் என்பது இது. வல்லே விரைவாக செறுத்து-கோபித்து. உடன் - விரைவில். ‘நாள் என ஒன்றுபோற் காட்டி உயிர் ஈறும் வாள்’ எனக் காலக்கழிவைக் குறள் கூறுவதும் உணர்க. கூற்று-கூறுபடுத்துவது; உடலையும் உயிரையும் கூறுபடுத்தி வேறுவேறாகப் பிரிப்பது ஆதலால், கூற்று என்றனர்.

5. என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால் பின்னாவது என்று பிடித்திரா, - முன்னே கொடுத்தார் உயப்போவர் கோடில் தீக்கூற்றம் தொடுத்தாறு செல்லுஞ் சுரம்.

கூற்றம் மிகவும் கொடிய தன்மையினை உடையது. எனினும் தன் கடமையிலே ஒருபோதும் கோணுதல் இல்லாமல் நடப்பது. அது, உயிர்களைப் பற்றிப் பாசக்கயிற்றாற் கட்டி இழுத்துச் செல்லும், அவ்வழியிலே வெம்மையான வெவ்வழல் நரகம் குறுக்கிடும். ஏதாவது ஒரு பொருள் தம் கையிலே கிடைக்கப் பெற்றால், இது நமக்குப் பின் காலத்திலே உதவுவது என்று அதனை இறுகப் பற்றிக் கொண்டிராமல், பிறருக்கு முதலில் அதனைக் கொடுத்து மகிழ்ந்தவர்கள், அந்த வெம்மையான பாழ் நரகைத் தப்பிச் செல்வார்கள் சென்று, சுவர்க்கமும் அடைவார்கள். செய்யாத பிறரோ, அந்த வெம்மையிலேயே வீழ்ந்து தவிப்பார்கள்.

தருமஞ் செய்வதால், மறுமையிலே நேரவிருக்கும் நன்மையைச் சொல்லுகிறது பாடல் தருமஞ் செய்தவர் சுவர்க்க போகம் அநுபவிப்பார்கள். அல்லாதோர் நரக வெம்மையிலே கிடந்து அழுந்துவார்கள் என்பது கருத்து. உயப்போதல்-தப்பிப் போதல். கோடுதல்-கோணுதல். தீ-கொடுமை. ஆறு-வழி. சுரம்வெம்மையான பாழ்நிலம் கூற்றம், வெம்மை உடையது எனினும், செய்தவர்க்கு அவ்வவ் வினைகளின் பயன்களை அநுபவிக்கச் செய்வதில் நடுநிலை தவறாதது. இது பற்றியே ‘கோடில் தீக் கூற்றம்’ என்றார்.

6. இழைத்தநாள் எல்லை இகவா, பிழைத்தொரீஇக்,

கூற்றம் குதித்துஉய்ந்தார் ஈங்கில்லை;-ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின், நாளைத் ‘தழிஇந் தழிஇந் தண்ணம் படும். நாம் பிறக்கும்பொழுதே நம்முடைய வாழ்நாள் இவ்வளவுதான் என்பதும் வரையறுக்கப்பட்டு விடுகின்றது.