பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நாலடியார்-தெளிவுரை

செய்து கொள்வார்கள். சிற்றறிவினரோ, தம் வயது முதிருந்தோறும் கெட்ட காரியங்களிலேயே முதிர்ச்சியுற்று, உழன்று வருந்தித் திரிந்து, கொறுக்கையைப் போல, உள்ளே தொளையாயிருப்பதனின்றும் ஒருபோதும் நீங்கவே

LOITLL_ss IT doofs.

வயது முதிர்ந்தாலும் புல்லறிவினரின் அறிவு தெளியாது என்பது கருத்து. கொறுக்கை-மேலே வன்மையாகத் தோன்றினும் உள்ளே தொளையுடையதாய் வன்மை யற்றிருப்பது. எருவை-எருவைச் சேவலும் ஆம்: கழுகின் ஒருவகை; இப்படிக் கொண்டால், “கழுகைப்போல் என்றும் தீத்தன்மையினின்றும் நீங்கார் என்க.

352. செழும்பெரும் பொய்கையுள் வாழினும், என்றும்

வழும்பறுக்க கில்லாவாம் தேரை;-வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணும், நுணுக்கமொன் றில்லாதார் தேர்கிற்கும் பெற்றி அரிது. செழிப்பான பெரிய குளத்தினுள்ளேயே எந்நாளும் தாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், தவளைகள், தம் மேலுள்ள வழுவழுப்பான அழுக்கினை என்றும் நீக்கிக் கொள்ள மாட்டாவாம். அது போலவே நுண்ணறிவாகிய ஓர் ஆற்றல் தம்மிடத்தே இல்லாதவர்கள் குற்றமில்லாத சிறப்பையுடைய நூல்களைப் படித்த காலத்தும், அவற்றின் நுண்மையான பொருள்களை அறியும் தன்மை உடையவராதல் அருமையாகும்.

‘அறிவுப் பக்குவமற்ற மூடன் என்ன படித்தும் தெளிவடையான் என்பது கருத்து.

353. கணமலை நன்னாட கண்ணின் றொருவர்.

குணனேயுங் கூறற்கு அரிதால், -குணன் அழுங்கக் குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்கு எற்றால் இயன்றதோ, நா! தொகுதிகளான மலைத்தொடர்களையுடைய நல்ல நாட்டை உடையவனே ஒருவருடையநல்ல குணங்களையும்கூடல் அவர் எதிரிலே நின்று முகஸ்துதியாகச் சொல்லுவதற்கு நா எழல் நமக்கு அருமையாயிருக்கும். அப்படியிருக்க, ஒருவரது எதிரிலேயே நின்றுகொண்டு, அவரது நற்குணங்கள் அழியும்படியாகக் குற்றங்களையே எடுத்துச் சொல்லுகின்ற சிற்றறிவினர்க்கு அவர்களுடைய நாக்கு எந்தப் பொருளால் செய்யப்பட்டதோ?