பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 - நாலடியார்-தெளிவுரை

நாலடிச் செய்யுட்களை அதிகாரங்களாக வகுத்து, ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துப் பத்துச் செய்யுட்களாக அமைத்த சான்றோர், மேற்பட்ட செய்யுட்களை எல்லாம் இப்படித் தனியே ஒர் அதிகாரமாக அமைத்தனர் என்பார்கள் அறிந்தோர். - t

இந்த இயலின் தலைப்பே இந்த அதிகாரத்தின் தலைப்பும் ஆகும். எனவே பல்வகையான நெறிகளையும் எடுத்துக் கூறுவது இந்த அதிகாரம் என்று கொள்க. இந்த இயல், இந்த ஓர் அதிகாரத்தை மட்டுமே கொண்டதாகும்.

37. பன்னெறி

361. மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்,

இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம்-விழைதக்க மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம் காண்டற்கு அரியதோர் காடு! மேகங்கள் தவழ்ந்து செல்லும்படியான உயர்ந்த மாடிகளை உள்ளதாய், சிறப்புப் பொருந்திய காவலுள்ளதாய், ஆபரணங்களாகிய விளக்குகள் நிலைபெற்று விளங்கப் பெறுவதாய் இருந்தாலும், விரும்பும்படியான நற்குணங்களால் மாட்சிமைப்பட்ட மனைவியைப் பெற்றில்லாதவனுடைய அந்த மனையானது, என்ன பயனை உடையதாகும்? அது, கண்களாற் காண்பதற்கும் கூடாத ஒரு கொடிய காடேயாகும்.

எவ்வளவு சிறப்புடையதானாலும், நல்ல மனையாளற்ற வீடு, கொடிய காடேயாகும் என்பது கருத்து.

362. வழுக்கெனைத்தும் இல்லாத வாள்வாய்க் கிடந்தும்,

இழுக்கினைத் தாம் பெறுவர் ஆயின்-இழுக்கெனைத்தும் செய்குறாப் பாணி சிறிதே அச் சின்மொழியார் கையுறாப் பாணி பெரிது.

இயற்கையிலே கற்பொழுக்கம் இல்லாத மகளிர்கள், தளர்வேதும் இல்லாத சிறந்த வாள்வீரர்களின் சிறந்த பாதுகாவ லிலே இருந்தபோதும், எங்ஙனமாயினும் தம் ஒழுக்கத்தினின்றும் தவறுதலைப் பெறுவார்கள். அங்ஙனமாயின், அந்த இனிதாகப் பேசும் சொற்களையுடைய மகளிர்கள், சிறு குற்றத்தையாயினும் செய்யாத காலமும் சிறிதேயாகும். அவர்கள் நல்லொழுக் கத்தைக் கைக்கொள்ளாத காலமோ அதிகமாகும்.