பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் - 185

‘கீழான மகளிர், எத்துணைக் காவல் இருந்தாலும் அவற்றையும் மீறித் தம் கீழ்மையான நடத்தையிலேயே ஈடுபடுவார்கள்’ என்பது கருத்து.

363. ‘எறி’ என்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி;- அட்டதனை உண்டி உதவாதாள் இல்வாழ்பேய், இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை.

தான் செய்த தவறுக்காகக் கணவன் சினங்கொண்ட போது ‘என்னை அடி, பார்க்கலாம் என்று அவனை எதிர்த்து நிற்பவள் கூற்றத்திற்குச் சமானமாவாள். அதிகாலையிலே சமையல் அறைக்குள் போய்ச் சமையல் வேலையிலே ஈடுபடாதவள் தீராத நோய்க்குச் சமமாவாள். தான் சமைத்ததைத் தன் கணவனுக்கு உண்ணக் கொடாது தானே உண்டுவிடுபவள் வீட்டிலே வசிக்கின்ற பேயாவாள். இப்படிப்பட்ட மூவரும், தம்மைக் கொண்ட கணவனைக் கொல்லும்படியான படை போன்றவர்கள் ஆவார்கள்.

‘கணவனை எதிர்த்து நிற்பதும் வீட்டில் உணவு சமைக்காமலிருப்பதும், கணவனுக்கு இடாமல் தானுண்பதும் கணவன் உயிரை வாங்குவது போல்வனவாகும் என்பது கருத்து.

364. ‘கடி’ எனக் கேட்டும், கடியான்; வெடிபட

ஆர்ப்பது கேட்டும், அது தெளியான்;-பேர்த்துமோர் இற்கொண் டினிதிருஉம் ஏமுறுதல், என்பவே, கற்கொண் டெறியும் தவறு.

இல்லற வாழ்வான துயர வாழ்வினைக் கைவிட்டு விடுவாயாக என்று சான்றோர் பலகாலுஞ் சொல்லக் கேட்டும் அதனைக் கைவிடமாட்டான். தலை வெடித்துப்போம்படியாக சாப்பறை முழங்குவதனைக் கேட்டும் வாழ்க்கை நிலையாமை யினை உடையது என்று தெளிவு கொள்ளான். மறுபடியும் ஒரு மனைவியைக் கொண்டு மகிழ்வாயிருக்கும்படி எண்ணுகின்ற தவறானது, கல்லெடுத்துத் தன்மேல் தானே எறிந்து கொள்ளும் குற்றம் போல்வதாகும் என்பர் பெரியோர். -

இது, ஒரு மனைவி இறந்த பின்னரும், மற்றொரு மனைவியை மணந்து இன்புறுவோம் என்று கருதுபவர்களைக் கண்டித்துக் கூறியதாகும்.