பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 - நாலடியார்-தெளிவுரை

365. தலையே, தவமுயன்று வாழ்தல்; ஒருவர்க்கு இடையே, இனியார்கண் தங்கல்; கடையே, புணரா தென் றெண்ணிப் பொருள் நசையால், தம்மை உணரார்பின் சென்று நிலை.

தவநெறிக்கு உரிய முயற்சிகளிலே ஈடுபட்டு வாழ்தல் ஒருவர்க்கு மேலான வாழ்வாகும்; அஃதன்றி, நற்குண நற்செய்கைகளையுடைய இனிய மனைவியுடன் கூடி வாழ்தல் நடுத்தரமான வாழ்வாகும்; கிடைக்கமாட்டாது என்று எண்ணிப் பொருளின் மீதுள்ள விருப்பத்தின் காரணமாகத், தம் மேன்மையினை அறியாத கயவர் பின்னே சென்று அவரை ஒட்டி வாழ்தலோ கடைத் தரமானதாகும்.

கருமிகளின் பின்னே, அவர் பொருளைப் பெற விரும்பி ஒட்டிக்கொண்டு திரிவது இழிவானதென்பது கருத்து.

366. கல்லாக் கழிப்பர், தலையாயார், நல்லவை

துவ்வாக் கழிப்பர், இடைகள்; கடைகள் ‘இனி துண்ணேம்: ஆரப் பெறேம் யாம்! என்னும் முனிவினாற் கண்பா டிலர்.

முதற்றரமான் அறிவினையுடையவர்கள், நூல்களைக் கற்றறிவதிலே தம் காலத்தைக் கழிப்பார்கள், நடுத்தர மானவர்கள் நல்ல வழியாற் கிடைத்த சுகபோகங்களை எல்லாம் அநுபவிப்பதிலே காலம் கழிப்பார்கள்; கீழ்த் தரமானவர்களோ, “யாம் இனிதாக உண்ணப் பெற்றிலேமே செல்வத்தை நிரம்பப் பெற்றிலோமே !’ என்று கருதுகின்ற வெறுப்பின் காரணமாகக் கண்ணுறக்கமும் கொள்ளாமற் கடந்து வருந்திக்கொண்டே இருப்பார்கள்.

‘உள்ளத்தில் நிறைவுற்று மகிழாது, பிறரைக் கண்டு, ஏக்கத்தால் தூக்கமின்றி அலைக்கழிவர் கடையர்கள்’ என்பது கருத்து.

367. செந்நெல்லால் ஆய செழுமுளை மற்றுமச்

செந்நெல்லே யாகி விளைதலால் அந்நெல் வய னிறையக் காய்க்கும் வளவயல் ஊர! மகனறிவு, தந்தை அறிவு. செந்நெல் வித்துக்களால் உண்டாகிய செழுமையான முளைகள், பின்னும் அச்செந்நெற் பயிராகவே ஆகி விளைவதனால், அப்படிப்பட்ட செந்நெற் பயிர்கள் வயல்கள்