பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 - நாலடியார்-தெளிவுரை

370. புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்,

விதுப்பற நாடின், வேறு அல்ல: -புதுப்புனலும் மாரி யறவே அறுமே, அவரன்பும் - வாரி யறவே அறும். மழைக் காலத்திலே பெருகி வருகின்ற புதுநீர்ப் பெருக்கமும் அழகிய காதணியணிந்த வேசை மாதர்களுடைய சிநேகமும் ஆகிய இவ்விரண்டும், பதற்றமின்றி அமைதியாக ஆராய்ந்து பார்த்தால் தம்முள் ஒரே தன்மை உடையனவேயன்றி வேறுபடுவன அல்ல. புதுநீர்ப் பெருக்கமும் மழை நீங்கினால் ஒழிந்துபோம்; வேசையர் நட்பும் பொருளின்வரவு நீங்கினால் ஒழிந்துபோம்.

வேசையர் உறவைக் கண்டித்து உரைத்தது இது.

பொருட்பால் முற்றும்.