பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 9

அப்படி விதிக்கப்பட்ட ஆயுட்காலத்தின் இறுதியானது ஒரு போதும் தன் எல்லையைக் கடந்து போவதே இல்லை. அந்த எல்லையைக் கடந்து நீங்கியவராகக் கூற்றத்தைக் கடந்துபோய் வாழ்ந்தவர்கள் என்பவர் எவருமே இந்த உலகத்தில் இதுவரை இல்லை. அதனால் மிகுதியான பெரும்பொருள்களை எல்லாம் வைத்திருப்பவர்களே அவற்றை எல்லாம் இப்போதே தருமத்திற்கு வழங்கத் தொடங்கி விடுங்கள். நாளைக்கே சாவை குறிக்கும் தண்ணுமை என்கிற சாக்காட்டுப் பறையானது, ‘தழிஇம் தழிஇம்’ என்று உங்களைக் குறித்தும் ஒலிக்கத் தொடங்கிவிட நேரிடலாம்.

இழைத்த நாள்-விதித்த நாள். எல்லை இகவா-கூடுதலும் குறைதலுமாகித் தன் எல்லையைக் கடவாது. பிழைத்து - தப்பி. ஒரீஈ நீங்கி. ஆற்ற மிகுதியான குறித்து-கடந்துபோய். தண்ணம் தண்ணுமை என்னும் சாக்காட்டுப் பறை. நாளைக்கே சாவு வந்தாலும் வந்து விடும்; அதனை யார் அறிவார்? அதனால் இப்போதே பொருள்களை வாரி வழங்குங்கள்: அறம் செய்து உய்யுங்கள் என்பது கருத்து.

7. தோற்றஞ்சால் ஞாயிறு நாழியா, வைகலும்

கூற்றம் அளந்து, நும் நாள்.உண்ணும் ஆற்ற அறஞ்செய்து அருள்உடையீர் ஆகுமின் யாரும் பிறந்தும், பிறவாதா ரில்.

தன்னுடைய போரொளியினால் விளக்கம் உடையதாகத் தோன்றுவது ஞாயிறு. அந்த ஞாயிற்றினையே நாழிகையாகக் கொண்டு, நாள்தோறும் அளந்து அளந்து கூற்றமானது உங்களுடைய வாழ்நாட்களை உண்டு கொண்டேயிருக்கும். அதனால், மிகுதியான அறங்களைச் செய்யுங்கள்; எவ்வுயிரி டத்தும் அருள் உடையவராக ஆகுங்கள்; எப்படிப் பட்டவரானாலும், அப்படி அறஞ்செய்து அருள் உடையவராக ஆகாமற் போனால், மனிதராகப் பிறந்தும் பிறவாதவராகவே சேர்த்துக் கருதப்படுவார்கள்.

‘மனிதப் பிறவி பெற்றதே தருமஞ் செய்வதற்கும், அருள் உடையவராவதற்குந்தான். அதனை மறந்தபோது அவர் மனிதராகப் பிறந்ததனால் என்ன பயன்? அவர் பிறவாத வராகவே எண்ணப்படுவர்’ என்பது கருத்து. தோற்றம்தோன்றுதலும் ஆம் வைகலும் நாள்தோறும். சூரியன் தோன்றி மறைதலினாலே, நாள் தோன்றி அழிய, அத்துடன் வாழ்நாளும் கழிந்துகொண்டே போவதனை இப்படிக் கூறினார்.