பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 - நாலடியார்-தெளிவுரை

38. பொது மகளிர்

பொதுமகளிர் என்போர், தமது நலத்தைத் தம் உள்ளங்கலந்த ஒருவனுக்குமட்டுமே அளித்துத் தாமும் இன்புற்று, அவனையும் இன்புறுத்துகின்ற கற்புத் தன்மை இல்லாதவர்கள். தம் நலத்தை விரும்பி, அதற்கான விலையைக் கொடுக்கும் ஆடவர்க்கெல்லாம், இன்னார் இனியார் என்னுமோர் வரைதுறையின்றி, இன்பந் தந்து வாழ்பவர்.

இவர், ஒருவனோடு ஒருத்தி என்ற சிறந்த அறநெறிக் கூறுபாட்டிற்கு எதிரானவராதலினாலும், இவர் உறவினாலே முறையாக அமைந்த பற்பல நற்குடும்பங்கள் கேட்டிற்கு உள்ளாவதனாலும் இவருடன் கொள்ளும் உறவைச் சான்றோர் தீயதென்று கடிந்து உரைப்பர்.

இப்படிப்பட்டவர் சிலர் உளதாகின்ற தன்மை, ஆடவர்களின் ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாகவே அமைவதேனும், அந்தக் குறைபாடு நீக்கப்படவேண்டும் என்னும் நல்லெண்ணத்தினால், இதனைக் கூறினர் சான்றோர்.

371. விளக்கொளியும் வேசையர் நட்பும், இரண்டும்

துளக்கற நாடின், வேறல்ல;-விளக்கொளியும் நெய்யற்ற கண்ணே அறுமே; அவரன்பும் கையற்ற கண்ணே அறும்.

விளக்கினது ஒளியும் வேசையர்களுடைய நட்பும் ஆகிய இவ்விரண்டும், மயக்கமின்றி ஆராய்ந்து பார்த்தால் தம்முள் வேறுபட்ட வகையின அல்ல; ஒன்றேயாகும். நெய் வற்றிய அந்தப் பொழுதிலேயே விளக்கொளியும் இல்லாமற் போகும். அதுபோலக் கைப் பொருள் கொடுத்தல் இல்லாமற்போன அந்தப் பொழுதே வேசையரின் நட்பும் நீங்கிப் போய்விடும்.

‘இதனால் உண்மை அன்பில்லாதவருடைய இன்பம் இனியதன்று துன்பந்தருவதே என்பது சொல்லப்பட்டது.

372. அங்கோட் டகலல்குல் ஆயிழையாள், நம்மொடு

செங்கோடு பாய்துமே என்றாள் மன்;-செங்கோட்டின் மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே, காற்கானோய் காட்டிக் கலுழ்ந்து.

அழகிய பக்கங்கள் உயர்ந்து அகன்ற அல்குல் தடத்தை உடையவளான, ஆராய்ந்தணிந்த அணிகலன்களையுடையவள்,