பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 191 ‘நம்மோடு செம்மையான மலையுச்சியில் இருந்தும் ஒருசேர வீழ்ந்து உயிர்விடுவோம்’ என்று, முன்னர் ஒரு காலத்தே எம்மிடத்துத் தன்னுடைய காதலுறுதி தோன்றிச் சொன்னாள். இப்போதோ, எம்மிடத்துப் பொருள் இல்லாமையினால், செம்மையான மலையுச்சியின் மேல் ஏறி வீழ்வதற்குத் துணிந்துள்ள எம்முடன் வந்து சேராமல், தன் காலிலே மலையேறமுடியாத வாதநோய் என்று கற்பித்துக் காட்டிப்

பொய்யாகக் கண்கலங்கித் தன் வீட்டிலேயே தங்கி விட்டாள்.

தன் செல்வமெல்லாம் வேசையுறவால் போக்கடித்து விட்டு, இறுதியில் மலையேறி வீழ்ந்து உயிர்விடத் துணிந்த ஒருவன் கூறுவதாக அமைந்தது இச்செய்யுள். இதனால் வேசையர் இன்பம் உண்மை இன்பம் அன்றென்பதும் பெறப்படும். -

373. அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்

செங்கண்மால் ஆயினும் ஆகமன் -தம் கைக்

கொடுப்பதொன்று இல்லாரைக் கொய்தளிர் அன்னார்,

விடுப்பர், தம் கையால் தொழுது.

அழகிய இடமகன்ற வானுலகத்திலேயுள்ள தேவர்களால் வணங்கப்படுகின்ற சிவந்த கண்களையுடைய திருமாலே யானாலும் ஆகட்டும்! தம் கையில் கொடுக்கும் படியான பொருள் ஒன்றும் இல்லாதவரைக் கொய்யத்தக்க தளிர் போன்ற மேனியை உடைய வேசையர்கள், தமது கையால் கும்பிட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள்; அன்றி, அவர்களுடன் கூடி இன்பந் தரமாட்டார்கள்.

‘அழகும் பெருமையும் முதலிய சிறப்பு வாய்ந்த ஆடவரேனும், வேசையர் தமக்குப் பொருள் தராதவரைக் கூடமாட்டார் என்பது கருத்து.

374. ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக் காணம் இல்லாதார் கடுவனையர், -காணவே செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார் அக்காரம் அன்னார் அவர்க்கு. அன்பில்லாத உள்ளத்தையும் அழகிய நீலோற்பல மலர்போன்ற கண்களையும் உடைய வேசையர்களுக்குத் தம்மிடத்தே பொருளில்லாதவர்கள், எத்துணைப் பிற வகையாற் சிறந்தவரேனும், விஷம் போன்று வெறுக்கத் தக்கவர்களே ஆவார்கள். செக்காட்டுதலாகிய தொழில்