பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 நாலடியார்-தெளிவுரை

உடையவரே யானாலும், அவர், தேடிய பெருஞ்செல்வம் உடையவரானால், அவரே அவர்களுக்குச் சர்க்கரை போல இனிமையாக இருப்பவ ராவார்கள்.

‘செக்காடுவார் மேனியின் கசடுடைமைபற்றி அவரைச் சுட்டிக் கூறினர். தரும் பொருள் ஒன்றை வைத்தே ஆடவரை மதிப்பர்’ என்பது கருத்து.

375. பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை

தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் ஆங்கு மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வர் விலங்கன்ன வெள்ளறிவி னார்.

தன்னைப் பிடிக்கவரும் பாம்பினுக்குத் தானும் அதனினமே போல ஒரு தலையினைக் காட்டியும் மதுரத்தைப் பெற்றிருக்கிற தெளிந்த நீரையுடைய தடாகத்திலுள்ள மீனுக்குத் தான் அதனினமேபோல மற்றொரு தலையைக் காட்டியும் வாழும் விலங்கினையொத்த செய்கையை உடையவர்கள் வேசையர். அவர்களுடைய தோள்களைச் சேர்பவர்கள் விலங்கினத்தைப் போன்ற பகுத்தறிவற்ற மூடர்களே ஆவார்கள்.

‘வேசையர், அவரவர்க்கும் இசைவார்போலக் காட்டிப் பலரையும் இன்புறுத்தும் வஞ்சனையுடையவர். அவர் உறவு, உண்மை உறவென நாடிச் செல்பவர் மூடர்கள் என்பது கருத்து.

376. பொத்தநூற் கல்லும், புணர்பிரியா அன்றிலும்போல்,

நித்தலும் நம்மைப் பிரியலம்’ என்றுரைத்த பொற்றொடியும் போர்த் தகர்க்கோடு ஆயினாள்;

நன்னெஞ்சே! நிற்றியோ, போதியோ, நீ?

“எனது நல்ல மனமே! நூலிலே கோத்த, உள்ளே தொளையுடையதான மணியைப் போலவும் கூடியிருத்த லின்றும் பிரியாத அன்றிற் பறவைகளைப் போலவும் எப்பொழுதும் நம்மை விட்டுப் பிரியமாட்டோம்’ என்று ! முன்னம் நம்மிடத்தே சொன்ன பொன் வளையல் அணிந்த அந்த வேசையும், இப்போது போர் செய்யுந் தன்மையுள்ள ஆட்டுக்கடாவின் கொம்புபோல மாறுபட்ட குணமுடையவள் ஆயினாள். அவள் அவ்வாறான பின்னரும் நீ அவளிடத்தி லேயே ஈடுபட்டு நிற்கின்றாயோ? அல்லது, என்னுடன் புறப்பட்டு வருகின்றாயோ?