பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 195

பகுதியும் அமைவது முரணாகாதோ எனின், அன்று. சிற்றின்பமாகிய காமங் கூறும் வகையினாலே, பேரின்பத்தின் சிறப்பைக் காட்டி வலியுறுத்தலே இதன் கருத்தாகும் என்று. அறிதல் வேண்டும். - wo

மேலும், உலகிற்குப் பலவகையிலும் உதவியாக அமைகின்றவன் இல்லறத்தானாகவே அந்நெறியின்றி உலகவாழ்வும் செம்மையுற அமையாதாகலின், அதனைத் திறம்பட நடத்துவதற்கு, அவன் தன் கற்புடை மனைவியோடு கூடிப் பெறும் இன்பமும் முதற்காரணமாதலின் அதனை ஆன்றோர் போற்றினர் என்றும் கொள்க.

39. கற்புடை மகளிர்

கற்புடைய பெண்களின் தன்மையினைக் கூறுவது என்பது அதிகாரப் பொருளாகும். கற்பாவது பெண்களிடத்தே தம் நாயகன் ஒருவனிடத்து மட்டுமே உண்டாகும் காதலின் உறுதியாகும்.

நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நான் வகையான பெண்மைக் குணங்களினால் நிறைவுற்று மகளிர், ஊழின் வலியினால், தமக்கு உரியான் ஒருவனைக் கண்டு காதலித்துக் கடிமணமும் புரிந்த பின்னர், அவன் ஒருவனே தமக்கு எல்லாமும் என வாழும் உயரிய நிலை இது.

தன் எனவும், தனது எனவும் எழுகின்ற பொதுவான அகப்பற்றும் புறப்பற்றும் இழந்தவளாகத் தமது என்னும் உறவுப் பிணிப்பிலே ஒன்றுபட்டவளாக நிலைபெறும் பெண்ணின் கற்பினது அமைதியிலேயே உலகத்தின் நல்வாழ்வும், வளர்ச்சியும், சிறப்பும் எல்லாம் பொருந்தியிருக்கிறதென்பது ஆன்றோர் கூறும் உண்மையாகும்.

381. அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன

பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப் பெருநசையாற், பின்னிற்பார் இன்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத் துணை. - பெறுவதற்கு அரிதான கற்புச் செவ்வியை உடையவளான அயிராணி என்பவளைப் போன்ற பெரும் புகழுடைய பெண்களே என்றாலும், தம்மைப் பெற்று இன்புற வேண்டும் என்ற ஆசையினால், தம்மை விரும்பித் தமது பின்னே சுற்றிக்