பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நாலடியார்-தெளிவுரை

கொண்டிருக்கிற வேற்றாடவர் இல்லாமையாகிய,

நற்குணத்தையே பேணுகின்ற அழகிய நெற்றியை உடைய

பெண்களே, தம் கணவருக்கு ஏற்ற நல்ல துணைவியராவர்.

அயிராணி-இந்திராணி, பெண்ணின்பால் தளர்ச்சிக்

கான குறிப்பு எதனையும் காணாமல், அவளையடைய ஒருவன்

முயலான், ஆதலால் இவ்வாறு கூறினார்.

382. குடநீர்அட்டு உண்ணும் இடுக்கட் பொழுதும்,

கடனி அறவுண்ணும் கேளிர் வரினும், கடனிமை கையாறாக் கொள்ளும் மடமொழி மாதர் மனைமாட்சி யாள்.

குடத்து நீரை மட்டுமே காய்ச்சி உண்பதன்றி, வேறேதும் உண்ணுதற்கு இல்லாத வறுமைத் துன்பம் வந்த காலத்தினும், கடல் நீரும் வற்றிப்போமாறு உண்டு விடுகின்ற பெருங் கூட்டமான சுற்றத்தார் வந்தாலும், தனது கடமையாகிய குணங்களையே ஒழுக்க நெறியாகக் கொள்ளுகின்ற, சாரமான இன்சொற்களை உடைய மனைவியே இல்லற வாழ்விற்குத் தகுந்த பெருமை உடையவளாவாள்.

விருந்தோம்பலும் சுற்றம் பேணலுமாகிய மனைவியரின் கடமையிலே அவளுக்கு உறுதிவேண்டும் என்பது வலியுறுத்தப் பெற்றது.

383. நாலாறும் ஆறாய், நனிசிறிதாய், எப்புறனும் மேலாறு மேலுறை சோரினும்-மேலாய வல்லாளாய் வாழுமூர் தற்புகழும் மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல். நான்கு பக்கங்களினும் வழியை உடையதாகியும், மிகவும் சிறியதாகியும், எல்லாப் பக்கங்களினும் மேல்வழியினின்று தன்மேல் மழைத்துளிகள் வழிவதாகியும் இருந்தாலும், மேலான தருமங்களைச் செய்யவல்ல மனத்திட்பம் உடையவளாகத் தான் வாழ்கின்ற ஊரிலே உள்ளவர் தன்னைப் புகழும்படியான மாட்சிமைப் பட்ட கற்பினையுடைய மனைவி வாழ்கின்றதே சிறந்த மனையாகும்.

“வறுமை மிகுதிக் கண்ணும், தன் ஒழுக்கம் பிறழாமல், பிறருக்கு உதவும் கருத்துடையவளே சிறந்த மனைவியாவாள்’ என்பது கருத்து.