பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o புலியூர்க் கேசிகன் - 203 .

என்றனை, பெரியதொரு குதிரையைப் பெற்றவனாகிய ஒருவன், அந்த நிலையினாலேயே, அதனை ஏறி நடத்தும் முறைமையைக் கற்றவனுமாவான் என்று அறியலாம் அல்லவோ?

உடன் போக்கிற்குத் துணிந்த தலைவியின் பேச்சு இது. போகத் துணிந்தவள், போகும் ஆற்2றலும் தனக்கு உண்டென்கின்றாள்.

399. முலைக்கண்ணும், முத்தும், முழுமெய்யும், புல்லும்

இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம் வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும், என் பூம்பாவை செய்த குறி.

(மகளைப் போக்கிய தாய் கவலைப்பட்டுச் சொல்லியது)

தன்னுடைய முலைக்கண்களும், முத்துமாலையும் நன்றாக அழுந்துமாறு என்னை உடல்முழுவதும் இறுகக் கட்டித் தழுவிக் கொண்ட அடையாளத்தை, அப்பொழுதே யான் சிறிதும் அறிந்திலேனே! என்னுடைய சித்திரப்பதுமை போன்ற மகள், அப்பொழுது செய்த அடையாளம், கலைமான் தொகுதிகள் வேங்கைப் புலிக்கு வெருவி ஒடுகின்ற காட்டுவழியிலே அவள் மறுநாள் செல்லப் போவதைக் குறித்துத்தான் போலும்.

400. கண்மூன்று உடையானும், காக்கையும் பையரவும்,

என்னீன்ற யாயும் பிழைத்த தென்? - பொன்னீன்ற கோங்கரும்பு அன்ன முலையாய்! பொருள்வயின் பாங்கனார் சென்ற நெறி!

(தலைமகள் பிரிவாற்றாமையைத் தோழிக்குச் சொல்லியது இது)

பொன்போன்ற தேமல்கள் பொருந்திய, கோங்கினது அரும்புகளைப் போன்று விளங்கும் முலைகளையுடைய தோழியே மூன்று கண்களை உடைய சிவபிரானும், காக்கையும், படமுடைய பாம்பும், என்னைப் பெற்ற தாயும் எனக்குச் செய்த குற்றந்தான் என்னவோ? யாதும் இல்லை. குற்றமெல்லாம், என் தலைவர், பொருளினிடத்துள்ள ஆசையினாலே என்னைப் பிரிந்து போன நெறியேயாகும். -

மன்மதனாலும், குயிலாலும், சந்திரனாலும் தன் துயரம் மிகுதியாக, மதனை எரியாது மீண்டும் உயிர்ப்பித்த சிவன்மேலும், தன் குஞ்சு அன்று எனக் கண்டும் குயிலைக்