பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 - நாலடியார்-தெளிவுரை


கொல்லாதுவிட்ட காக்கையின் மீதும், முற்றவும் விழுங்காமல் சந்திரனை மீண்டும் உமிழ்ந்த ராகு கேதுக்கள் மீதும், பிறந்த ஞான்றே தன்னைக் கொன்று விடாது துயரங்களுக்கு ஆட்படுமாறு தன்னை வளர்த்த தாயின்மீதும் குறைப்பட்டு நொந்து கொள்ளுகின்றாள் தலைவி. அவன் அருகே இருந்தால் அவை துன்பஞ் செய்வன அல்லவாதலால், அவன் அருகிலில்லாமையே உள்ள குற்றம் எல்லாம் எனத், தன் ஆற்றாமை மிகுதியையும் கூறுகின்றாள் அத் தலைவி.


காமத்துப் பால் முற்றும். நாலடி நானூறும் புலியூர்க் கேசிகன் தெளிவுரையும் முற்றுப் பெற்றன.