பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 205

கீழ்க்கணக்கு நூல்கள் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு. அவற்றைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்’ என்று குறிப்பிடுவார்கள். அவற்றின் பாவமைதியை ஒட்டியே “கீழ்க்கணக்கு என அவை வகுக்கப்பெற்றன. இதனை,

அடி நிமிர்வு இல்லாச் செய்யுள் தொகுதி அறம் பொருள் இன்பம் அடுக்கி அவ்வத் திறம்பட வருவது கீழ்க்கணக்கு ஆகும் என வரும் பன்னிரு பாட்டியல் சூத்திரத்தால் அறியலாம்.

தொல்காப்பிய உரையாசிரியர்களான நச்சினார்க்கினியரும் பேராசிரியரும், ‘அம்மை என்னும் வனப்பின்பாற் பட்டனவாகக் கீழ்க்கணக்கு நூல்களைக் காட்டுவர்.

சின்மென் மொழியால் தாய பனுவலின் அம்மை தானே அடிநிமிர்பு இன்றே. என்னும் குத்திர உரைக்கண் இதனைக் காணலாம்.

பதினெண் கீழ்க்கணக்கு நூற்கள் எவை என்பதனை ஒரு பழஞ்செய்யுள் கூறுகின்றது. அது

நாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை, முப் பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம், இன்னிலைய காஞ்சியுடன், ஏலாதி என்பவும், கைந்நிலையும், ஆம் கீழ்க் கணக்கு.

என்பதாம்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் நீதி நூல்கள் பதினொன்று: அகப்பொருள் பற்றியவை ஆறு புறப்பொருள் பற்றியது களவழி என்னும் ஒன்று.

இவற்றின் விளக்கம் அடியில் வருமாறு:

நூல்கள் - பாடியவர் பாடல்கள்

1. நாலடியார் சமண முனிவர்கள் 400

2. நான்மணிக்கடிகை விளம்பிநாகனார் 100

3. இன்னா நாற்பது கபிலர் 40