பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நாலடியார்-தெளிவுரை

‘செல்வத்தால் செருக்கடைந்து கெடாமல் அறவழி களிலே ஈடுபடுதல் வேண்டு’மென அதன் நிலையாமையை முதலில் வைத்தவர், அடுத்து, ‘உடலின் வலிமையால் கட்டற்று வாழ்தல் கூடாது என, இதனை அடுத்து வைத்துள்ளனர்.

11. நரைவரும் என்றெண்ணி, நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார், -புரைதீரா, மன்னா இளமை மகிழ்ந்தாரே, கோலூன்றி, இன்னாங்கு எழுந்திருப் பார். நல்ல அறிவாளர்கள், பின்னர் தமக்கு நரைவரும் என்பதை எண்ணியவர்கள். அதனால் அவர்கள் இளம் பருவத்திலேயே உடலின் வளத்தைக் குறைக்கும் ஆசாபாசங் களை எல்லாம் துறந்துவிட்டார்கள். இளமை என்றும் குற்றங்களினின்றும் தீராதது; நிலையில்லாத தன்மையினையும் உடையது. அதனை உணராமல், அந்தப் பருவத்தின் களிப்பில் அதிகமாக ஈடுபட்டவர்களே, இப்போது கோல் ஊன்றி மிகவும் வருத்தத்துடன் எழுந்திருக்கின்றனர்.

நல்லறிவு-பழம் பிறவிகளிலே செய்த நற்செயல்களினாலே வந்து வாய்க்கும் அறிவு. குழவி-குழவிப் பருவம். துறந்தார். பற்றுக்களைத் துறந்துவிட்டவர். புரை-குற்றம். மன்னாநிலையாத, இளமையில் துறந்தவர் நரைதிரை மூப்பின்றி வலுவுடையராய் இருப்பதும், துறவாது சிற்றின்பங்களிலே திளைத்தவர் தளர்வுற்று நலிவதும் கூறி, இளமையின் நிலையாமையை வற்புறுத்துகிறது இந்தப் பாடல். ‘குழவி சிறு பருவம் குறித்தது.

12. நட்புநார் அற்றன; நல்லாரும் அஃகினார்;

அற்புத் தளையும் அவிழ்ந்தன; - உட்காணாய் வாழ்தலின், ஊதியம் என்னுண்டாம்? வந்ததே, ஆழ்கலத்து என்ன கலி’.

‘நட்பு’ என்று ஒருவரை யொருர் பிணித்திருந்த பிணிப்புக்களும் அற்றுப் போயின. மனைவிமாரும் தம் அன்பின் அளவிலே குறைந்தவராய் விட்டார்கள். உற்றார் உறவினர் என்று ஒருவரோடொருவர் கொண்டிருந்த பிணிப்பும் கட்ட விழ்ந்து போய்விட்டது. இவை எல்லாவற்றையும் உள்ளத்திலே எண்ணிப் பார்ப்பாயாக. இப்படி வாழ்கின்றதனாலே உண்டாகும் பயன்தான் என்ன? கடலிலே அமிழ்ந்து கொண்டிருக்கின்ற மரக்கலத்தைப் போன்ற துன்பமும்தான், உனக்கு இதோ வந்து விட்டதே!