பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 17

இருக்கும் கருவை வெளிப்படச் செய்து, தாயானவள் அலறித் துடிக்கப் பிள்ளையைக் கொண்டு போகின்றதனால், அந்தக் கூற்றத்தின் வஞ்சனையை மறவாமல், உறுதியாக அறிந்து தெளிவுகொள்ளுதலே மிகவும் நன்மையாகும்.

‘எமன் எப்போது வருவான்? என்று எவராலுமே சொல்ல முடியாது. தாய் அலறப் பச்சிளங் குழந்தையையும் கொண்டு போகும் கருணையற்றவன் அவன். அதனை உணர்ந்து, காலம் தாழ்த்தாமல் தருமஞ் செய்து நல்வினைகளைத் தேடிக் கொள்ளுங்கள் என்பது கருத்து. தோட் கோப்பு-தோளிலே கோத்துக் கொண்டு செல்லும் கட்டுச் சோற்று மூட்டை வழியிடையிலே அது பசி நீக்குவதுபோல், நல்வினைகளும் வறுமைக்குத் துணை செய்யும் என்க.

3. யாக்கை நிலையாமை

இளமை நிலையுள்ளது அன்று. அது நிலையுள்ளது என்று கருதி நல்ல வினைகளைச் செய்வதிலே ஈடுபடாமல், சிற்றின்பங்களிலே ஈடுபடுதல் கூடாது என்றது முன் அதிகாரம். இந்த அதிகாரம், இளமை மட்டுமன்று யாக்கையே நிலையற்ற ஒன்றுதான் என்பதைக் கூறி அதனால், நிலையுடையதான உயிரின் நன்மையைக் கருதி, அனைவரும் அறநெறியிலே - ஈடுபடுதல் வேண்டும் என்று வற்புறுத்துகிறது.

எலும்பு, தசை, தோல் முதலிய எட்டு வகையான தாதுக்களால் யாக்கப்பட்டது உடல். யாத்தல்-கட்டுதல். அதனால், அது யாக்கை எனப்பட்டது. இடத்து நிகழ்கின்ற பொருளான இளமைப் பருவத்தின் நிலையாமை கூறிய பின்னர், அடுத்து இடமாகிய யாக்கையின் நிலையாமையை உணர்த்துகின்றனர்.

உடல், உயிரின் நன்மைக்கான செயல்களிலே ஈடுபடுவதற்கு உதவும் கருவியாகவே அமைந்தது. அதனால், நிலையாமையை உணர்ந்து உயிரின்பத்திலே நாட்டஞ் செலுத்தவேண்டும் என்பது கருத்து.

21. மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்

தலைமிசைக் கொண்ட குடையர்,- நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத் தில்.