பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நாலடியார்-தெளிவுரை

உறவின் முறையார் எல்லாரும் கூட்டமாகக் கூடிக் கொண்டு கலீரென்று பெருங்குரலிலே கூவி அழப், பிணத்தைத் தூக்கிக் கொண்டு போய்ச் சுடுகாட்டிலே சேர்ப்பவர்களைக் கண்டுள்ளோம். அப்படிப் பார்த்திருந்தும், திருமணம் செய்து கொண்டு, இவ்வுலகத்திலே உறுதியாக இன்பம் உண்டு உண்டு என்று சொல்லும் மயக்கமான அறிவுள்ளவனை என்ன சொல்வது? அவனைக் குறித்துத், ‘தொண் தொண்’ என ஒலிக்கும் சாக்காட்டுப் பறைதான் அவனுக்கு யாக்கையின் நிலையாமையைத் தெரிவிக்கும் போலும்!

‘மணவாழ்வின் இன்பத்திலே திளைத்திருப்பவனுக்கு, ஒலிக்கும் சாக்காட்டுப் பறைதான், உன்னுடலுக்கும் இதுதான் கதியென யாக்கை நிலையாமையை எடுத்துச் சொல்லும்’ என்பது கருத்து. கணம்-கூட்டம். காடு-சுடுகாடு.

26. நார்த்தொடுத்து ஈர்க்கிலென்? நன்றாய்ந்து

அடக்கிலென்? பார்த்துழிப் பெய்யிலென்? பல்லோர் பறிக்கிலென்? தோற்பையுள் நின்று, தொழிலறச் செய்துட்டும் கூத்தன் புறப்பட்டக் கால். தோலாற் பொதிந்திருக்கின்ற உடலாகிய பையினுள்ளே யிருந்து, தான் செய்யவேண்டுமன விதிக்கப்பட்ட தொழில்களை முழுவதும் செய்து, தன் உடலை அநுபவிக்கச் செய்கின்ற கூத்தாடியாகிய உயிரானது, அந்த உடலைவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்ட தென்றால், அதன் பின், அந்த உடலை நாரால் தொடுத்து இழுத்துச் சென்றால் என்ன? நன்றாக ஆராய்ந்து அடக்கஞ் செய்தால்தான் என்ன? கண்டவிடத்திலே போட்டால்தான் என்ன? பலரும் பழித்தால்தான் என்ன? எதுவும் அந்த உடலைப் பற்றுவதே இல்லை.

உயிர்தான் உடலுக்கு அநுபவமாகிய இன்பத்தையும் துன்பத்தையும் தருவது. அது போய்விட்டபின் உடல் உணர் வற்றதாகிவிடும். அதைக்குறித்து ஏன் இவ்வளவு ஆர்ப் பாட்டங்கள்? இப்படி அதன் நிலையாமையைக் கூறுவது இது. அடக்கில் - அடக்கஞ் செய்தல். கூத்தன் - நொடிக்கொரு முறை உடலைத் தன்னிச்சை போலெல்லாம் ஆட்டுவிப்பதால், பாவையினை ஆட்டுவிக்கும் கூத்தனாக உயிர் புனைந்து கூறப்பட்டது.