பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 23

அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்னும் காரணத்தால், அதனை வலியுறுத்திக் கூறுவது இந்தப் பகுதி.

‘அறம்’ என்பது இம்மை, மறுமை, வீடு என்ற மூன்றையும் தருவது என்று முன்பே சொல்லியிருக்கிறோம். ‘இம்மை’ என்பது இந்த உலக வாழ்வு. ‘மறுமை’ என்பது செய்த வினைகளின் பயனாக நாம் இறந்த பின்னர் அநுபவிக்கும் சுவர்க்கமும் நரகமும் ஆகிய வாழ்வு. வீடு, அனைத்தையும் விட்ட பேரின்பநிலை. இம்மூன்றுமே அறத்தால் வருவதனால் அதனை எவரும் அலட்சியப் படுத்தாமல் மேற்கொள்ளல் வேண்டும்.

31. அகத்தாரே வாழ்வார்?’ என்று அண்ணாந்து நோக்கிப்

புகத்தாம் பெறாஅர், புறக்கடை பற்றி மிகத்தாம் வருந்தி இருப்பரே, மேலைத் தவத்தால் தவஞ்செய்யா தார்.

முன் பிறவிகளிலே செய்த தவத்தின் பயனாக, நல்லறிவு உடையவர்களாகித் தவஞ்செய்பவரோ இளமையிலேயே தவநெறிப்பட்டு உள்ள உறுதியுடன் விளங்குவார்கள். அவ்வாறன்றித் தாமும் தவஞ்செய்வோமென்று உள்ளத்தே உறுதியற்றுப் போலியாக முயல்பவர்களோ, பசியால் துன்புற்று, பெரிய செல்வர்களின் வீடுகளை அண்ணாந்து நோக்கி, இந்த வீட்டிலுள்ளவர்களே உண்மையாக வாழ்பவர்கள்’ என்று சொல்லி, அவரிடம் சென்று இரந்து பெற முயன்றும், உள்ளே தாம் நுழையப் பெறாதவராக, அவ்வீட்டுப் புறக்கடையினைப் பற்றிக்கொண்டு, தம் நிலையை எண்ணி மிகவும் வருந்தி இருப்பவர்களாவார்கள்.

“அவர்கள் துறவியராக முயன்றும் பசித்துயரால் இரந்துண்ண முயன்றதன் காரணமாக உள்ளத்து உறுதியற்ற வராகின்றனர். அது மேலைத்தவம் இன்மையால் வந்தது. அவர் துன்பமும் முழுக்கப் பற்று விடாமையால் நேர்ந்தது’ என்பது கருத்து.'தவமும் தவம் உடையார்க்கு ஆகும் என்றதும் இது. புறக்கடைகடைப்புறம்; பின்புற வாயில்.

32. ஆமாம் நாம், ஆக்கம் நசைஇ, அறம் மறந்து,

போவாம் நாம் என்னாப், புலைநெஞ்சே! - ஒவாது நின்றுளுற்றி வாழ்தி எனினும், நின் வாழ்நாள்கள் சென்றன; செய்வது உரை. ஐயோ! அற்பத்தனமான எண்ணங்களை உடைய நெஞ்சமே!'நாம் மென்மேலும் செல்வம் உடையவர்களாவோம்’